Showing posts with label Science. Show all posts
Showing posts with label Science. Show all posts

Tuesday, August 23, 2022

நுண்ணங்கிகள் (Micro Organisms) - தரம் - 6 - விஞ்ஞானம் - Unit -1

வெற்றுக் கண்களால் பார்க்க முடியாத மிகச் சிறிய அங்கிகளாகும்..

இவை பின்வருமாறு வகைப்படுத்தப்படும்.

பக்ற்றீரியாக்கள்

வைரசுகள்

பங்கசுகள்

புரோட்டசோவாக்கள்

அல்காக்கள்

பெரும்பாலான நுண்ணங்கிகள் கூட்டு நுணுக்குக்காட்டியாகிய ஒளி நுணுக்குக் காட்டியினூடாக அவதானிக்கப்படுகின்ற போதிலும் வைரசுக்கள் மாத்திரம் இலத்திரன் நுணுக்குக்காட்டியினூடாக புலப்படத்தக்க மிகச் சிறிய நுண்ணங்கியாகும்.

ஒளி நுணுக்குக் காட்டி(Light Microscope)

இலத்திரன் நுணுக்குக்காட்டி(Electron Microscope)

நுண்ணங்கிகள் பெரும்பாலும் நீர், மண், வளி, அழுகும் பொருட்கள் போன்றவற்றில் காணப்படுகின்றன.

பக்ற்றிரியாக்கள், பங்கசுக்கள் போன்றவை அழுகல் வளரிப் போசனையுடையவையாகும்.

எனவே, இதற்கமைவாக அங்கிகளை தாவரங்கள், விலங்குகள், நுண்ணங்கிகள் என வகைப்படுத்த முடியும்.

நுண்ணங்கிகளினால ஏற்படும் நன்மைகள்

1. பால் பொருட்களின் உற்பத்தி

Eg:- தயிர், யோக்கட், பாற்கட்டி, வெண்ணெய்

2. வெதுப்பக உற்பத்தி

Eg:- பாண், பணீஸ்

3. மதுசார உற்பத்தி

Eg:- கள், பியர், வைன்

4. வினாகிரி உற்பத்தி

5. தும்புக் கைத்தொழில்

6. நுண்ணுயிக்கொல்லிகளின் உற்பத்தி

7. உயிர் வாயு உற்பத்தி

8. கூட்டுப்பசளை உற்பத்தி

மேற் கூறப்பட்டவை தவிர வேறு பல நன்மைகளும் நுண்ணங்களால் ஏற்படுகின்றன.

நுண்ணங்கிகளினால ஏற்படும் தீமைகள்

1. நோயை ஏற்படுத்துதல்

2. உணவைப் பழுதடையச் செய்தல்

3. உயிரியல் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுதல்


Saturday, August 20, 2022

உயிருள்ளவையும் உயிரற்றவையும் - தரம் - 6 - விஞ்ஞானம் - Unit -1

உயிர் என்பதனை எம்மால் வரைவிலக்கணப் படுத்த முடியாது எனினும், உயிரங்கிகளில் காணப்படும் சில இயல்புகள் உயிரற்றவற்றில் காணப்படாமையைக் கருத்திற் கொண்டு உயிருள்ள அங்கிகளும் உயிரற்றவைகளும் வேறுபடுத்தப்படுகின்றன.

உயிருள்ளவற்றை உயிரற்றவற்றிலிருந்து வேறுபடுத்தும் இயல்புகள்

1. வளர்ச்சி (Growth)

2. போசனை (Nutrition) 

3. அசைவு (Movement)

4. சுவாசம் (Respiration)

5. இனப்பெருக்கம் (Reproduction)

மேற்படி சிறப்பியல்புகளைக் காட்டுபவை உயிருள்ளன எனவும் அதனைக் காண்பிக்காதவை உயிரற்றவை எனவும் அடையாளப்படுத்தப்படும்.

உயிருள்ளவை

Eg:- மனிதன், ஆடு, மாடு, பலாமரம்

உயிரற்றவை

Eg:- பேனா, கல், கண்ணாடிக்குவளை, இறப்பர்

வளர்ச்சி, அசைவு என்பன உயிருள்ளவற்றிற்கும், உயிரற்றவற்றிற்கும் பொதுவான இயல்புகளாகும்.

உயிர்ச் சூழலின் விந்தைகள் - தரம் - 6 - விஞ்ஞானம் - Unit -1

சூழல் (Environment)

எம்மைச் சூழ உள்ளவை யாவும் சூழலாகும்

Eg:- வளி, நிலம், நீர்நிலைகள், அங்கிகள்

தாவரங்களும் விலங்குகளும் அங்கிகளாகும்.

நீங்கள் அவதானித்த சூழல்கள் சில வருமாறு

1. வகுப்பறைச் சூழல்

2. விவசாயச் சூழல்

3. காட்டுச் சூழல்

4. கடற்கரைச் சூழல்

இதே போன்று நீங்களும் உங்கள் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து அங்கு காணப்படும் சூழல்களை அவதானித்து வரிசைப்படுத்தவும்.

Thursday, May 6, 2021

விற்றமின்கள் (Vitamins)

இவை சேதனச் சேர்வைகளால் ஆக்கப்பட்டவை.

பின்வருமாறு வகைப்படுத்தப்படும்.

1. நீரில் கரையும் விற்றமின்கள் - B, C

இவை அதிகளவில் உடலினுள் உள்ளெடுக்கப்படும் பட்சத்தில் மேலதிகமானவை சிறுநீரினூடாக  வெளியேற்றப்படும். எனவே உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படமாட்டாது. 

2. கொழுப்பில் கரையும் விற்றமின்கள் - A, D, E, K

இவை அதிகளவில் உடலினுள் உள்ளெடுக்கப்படும் பட்சத்தில் மேலதிகமானவை உடலினுள்   சேர்க்கையடைந்து உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

விற்றமின்கள் அடங்கியுள்ள உணவுகள்

1. விற்றமின் - A - மஞ்சள் நிறமான காய்கறி மற்றும் பழங்கள், பால்,               முட்டை
2. விற்றமின் - B - ஈஸ்ட், முழு தானியங்கள், ஈரல், பயறுகள்
3. விற்றமின் - C - புளிப்புச் சுவையுடைய பழங்கள்
4. விற்றமின் - D - சூரிய ஒளி, வெண்ணெய், மாஜரின்
5. விற்றமின் - E - முளைவரும் கோதுமை, கீரை வகைகள், பால்
6. விற்றமின் - K - முடடைக்கோஸ், பச்சை பட்டாணி, காய்கறிகள்

விற்றமின்களும் அவற்றால் ஏற்படும் குறைபாடுகளும்

விற்றமின்கள் நாம் அன்றாடம் உள்ளெடுக்கும் உணவில் குறைவடைகின்ற போது பல்வேறு குறைபாட்டு அறிகுறிகள் எமது உடலில் ஏற்படுகின்றன.

1. விற்றமின் - A - மாலைக்கண், பீற்றோப்புள்ளி
2. விற்றமின் - B - பெரிபெரி நோய்/ பெலகிரா நோய், குருதிச்சோகை,   
    கடைவாய் அவிதல்
3. விற்றமின் - C - ஸ்கேவி நோய், முரசு கரைதல், நோய் எதிர்ப்பு சக்தி 
    குறைவடைதல்
4. விற்றமின் - D - என்புருக்கி நோய், ஒட்சியோபோரோசிஸ்
5. விற்றமின் - E - மலட்டுத்தன்மை
6. விற்றமின் - K - குருதி உறையா நோய்

விற்றமின் B ஆனது சிக்கலான குடுப்ப விற்றமின் ஆகும்.
இதில் B1, B2, B3, B5, B6, B7, B9, B12என்பன உள்ளடங்குகின்றன.
பெருங்குடலில் வாழும் E.Coli  Bacteria கள் விற்றமின் B இனைத்  
        தொகுக்கும் ஆற்றல் கொண்டவை. எனினும் 
        நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் உடலினுள் 
        உள்ளெடுக்கப்படுகின்றபோது இவ் Bacteria கள் 
        அழிக்கப்படுகின்றன.
வயதானவர்களின் உணவுக்கால்வாயத் தொகுதி விற்றமின் B 
        இனை அகத்துறுஞ்சும் ஆற்றல் அற்றவை எனவே இவர்களுக்கு 
        ஊசி மூலமாகவே இவ்விற்றமின் உடலினுள் செலுத்தப்படுகிறது.

Sunday, May 2, 2021

இடைப்புகுந்த பிரியிழையம் (Intercalary Meristem)

 

தண்டின் கணுக்களில் காணப்படுவதுடன் அதன் செயற்பாட்டின் காரணமாக கணுவிடையின் நீளம் அதிகரிக்கும்.

கரும்பு, மூங்கில் மற்றும் புற்தாவரக் குடும்பங்களில் காணப்படும்.

பக்கப் பிரியிழையம் (Lateral Meristem)


தாவரத்தண்டு மற்றும் வேரில் காணப்படுவதுடன் தாவரத்தின் நிலைக்குத்து அச்சுக்கு சமாந்தரமாக இந்த இழையம் அமைந்துள்ளது.

இருவித்திலைத் தாவரத் தண்டில் பக்கப் பரியிழையமாகிய மாறிழையத்தின் செயற்பாட்டினால் தாவரத்தின் சுற்றளவு அதிகரிக்கின்றது.

உச்சிப் பிரியிழையம் (Apical Meristem)

தாவரத்தின தண்டு, வேர் என்பவற்றின் உச்சிப்பகுதியிலும் கக்கவரும்புப் பகுதியிலும் காணப்படும்.

இதன் செயற்பாட்டினால் தாவரமானது உயரத்தில் அதிகரிக்கும்.

Friday, May 15, 2020

சிக்கலான நிலையிழையம்

ஒன்றுக்கு மேற்பட்ட வகையான வியத்தமடைந்த கலவகைகளினால் ஆக்கப்பட்ட இழையம் சிக்கலான நிலையிழையம் எனப்படும்.

 1. காழ் (Xylem)
 2. உரியம் (Phloem)

எளிய நிலையிழையம்

இரு நிலையிழையத்தில் உள்ள வியத்தமடைந்த கலங்கள் ஒரு வகைக்குரியதாகக் காணப்படுமாயின் எளிய நிலையிழையம் எனப்படும்.
Eg:- புடைக்கலவிழையம்
       ஒட்டுக்கலவிழையம்
       வல்லுருக்கலவிழையம்

நிலையிழையம்

ஒரு குறிப்பிட்ட தொழில்களை நடாத்துவதற்கு பிரியிழையக் கலங்களில் இருந்து வியத்தமடைந்துள்ள கலங்களின் கூட்டம் நிலையிழையம் எனப்படும்.
இவை பொதுவாக பிரியுமாற்றலை இழந்துள்ளது. இருப்பினும் சிலவேளைகளில் மீண்டும் பிரியுமாற்றலைப் பெறும்.
அங்கிகளின் வளர்ச்சியின் போது நிலையிழையங்கள் தோற்றுவிக்கப்படும். (தோற்றுவிக்கப்படும்)
ஒரு தனிக்கலத்தில் ஆரம்பித்து நடைபெறும் பல்கல அங்கிகளின் வளர்ச்சி மூன்று அவத்தைகளாகப் பிரிக்கப்படும்.

1. கலப்பிரிவு
2. கலநீட்சி
3. கலவியத்தம்

கலப்பிரிவு
இழையுருப்பிரிவினதும் கலப்பிரிவினதும் (குழியவுருப்பிரிவு) விளைவாக கல எண்ணிக்கையில் ஏற்படும் அதிகரிப்பு கலப்பிரிவு எனப்படும்.

கலநீட்சி/ கலவிரிவு
பதார்த்தங்களின் தொகுப்பின் விளைவாக ஏற்படும் மீளமுடியாத கலப்பருமன் அதிகரிப்பு கலநீட்சி/ கலவிரிவு எனப்படும்.

கலவியத்தம்
ஒரு குறித்த தொழிலைச் செய்வதற்காக கலங்களோ அல்லது இழையங்களோ சிறத்தலடையும் செயன்முறை கலவியத்தம் எனப்படும்.

அங்கியின் வளர்ச்சியும் வியத்தமும் கலங்களில் DNA இல் காணப்படும் பிறப்புரிமைச் செய்தியினால் கட்டுப்படுத்தப்படும்.

பிரியிழையம்

உயிர்ப்பாகப் பிரிகையடைந்து புதிய கலங்களைத் தோற்றுவிக்கும் வியத்தமடையாத கலங்களின் கூட்டம் பிரியிழையம் எனப்படும்.

இவை மூன்று வகைப்படும்

1. உச்சிப் பிரியிழையம்
2. பக்கப் பிரியிழையம்
3. இடைப்புகுந்த பிரியிழையம்

தோலின் அடியில் உள்ள தொடுப்பிழையம்

வேறுபட்ட வகையான கலங்களையும், நார்களையும் கொண்டது. இக் கலங்களும் நார்களும் தாயத்தினுள் அமிழ்ந்து காணப்படுவதுடன் இதற்கு நரம்பு, குருதி விநியோகம் என்பன காணப்படும்.

தொழில்

1. உடலின் பல்வேறுபட்ட இழையங்கள், அங்கங்களை இணைத்து அவற்றிற்கு ஆதாரம் வழங்குதல்
                         
இவை பின்வரும் பகுதிகளைக்கொண்டது
 1. ஐதான தொடுப்பிழையம் Eg:- சிற்றிடைவிழையம்
 2. கொழுப்பிழையம்/ அடிப்போசு இழையம்
 3. அடர்த்தியான தொடுப்பிழையம்
   1. வெண்ணார்த் தொடுப்பிழையம்
   2. மஞ்சள்நார்த் தொடுப்பிழையம்

Thursday, May 14, 2020

தொடுப்பிழையம்

மனிதவுடலிலுள்ள பல்வேறு தொடுப்பிழையங்கள்

1.தோலின் அடியில் உள்ள தொடுப்பிழையம்
2. என்பிழையம்
3. கசியிழையம்
4. குருதி


Wednesday, May 13, 2020

இழையம்(Tissue)

அங்கிகளின் உடலில் குறித்தவொரு தொழிலை அல்லது பல தொழில்களை ஆற்றுவதற்கானசிறத்தல் அடைந்ததும், பொதுவான உற்பத்தி தோற்றுவாயைக் கொண்டதுமான கலங்களின் கூட்டம் இழையம் எனப்படும்.

இழையங்கள் தோற்றுவிக்கப்படல் அங்கியின் வினைத்திறன் அதிகரிப்புக்கு உதவும்.

இழையங்கள் இரு வகைப்படும்

1. தாவர இழையம்
2. விலங்கு இழையம்

Tuesday, June 9, 2015

நிர்ப்பீடனம்(Immunity)

உடலினுள் புகும் நுண்ணங்கிகளை அகற்றும் அல்லது பெருகும் செயல் முறையைத் தடுக்கம் ஆற்றலே நிர்ப்பீடனம் எனப்படும்.

நிர்ப்பீடனம் காரணமாக உடலானது நோய்கள், நுண்ணங்கிகளின் தொற்றுதல், பெருக்கம் போன்றவற்றிலிருந்து தடுக்கப்படும்.

இது இருவகைப்படும்.

1. சிறப்பான நிர்ப்பீடனம் (Specific Immunity)
2. பொதுவான நிர்ப்பீடனம் (Non-Specific Immunity)
3. சிறப்பான நிர்ப்பீடனம் (Specific Immunity)

இது குறுகிய காலத்துக்கு அல்லது நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கலாம்.
உடலில் இந்நீர்ப்பீடனம் இரு வழிகளில் ஏற்படும்.

1. குறிப்பிட்ட நோயொன்று ஒரு தடவை ஏற்படுவதனால் ஏற்படும்
    நீர்ப்பீடனம்
Eg  :-  கொப்புளிப்பான், சின்னமுத்து, இது இயற்கையாகப் பெற்ற உயிர்ப்பான
          நிர்ப்பீடனம் ஆகும்.

2. குறிப்பிட்ட ஒரு நோய் வராது தவிர்ப்பதற்காக செயற்கையாக
    ஏற்படுத்தப்பட்ட நிர்ப்பீடனம்.
Eg  :- பிறப்பின்போது வழங்கப்படும் முக்கூட்டு வக்சின், போலியோ தடுப்பு
         மருந்து போன்றவை செயற்கையாகப் பெற்ற உயிர்ப்பான நிர்ப்பீடனம்
         ஆகும்.தாயின் கருப்பையில் உள்ளபோது தாயிலிருந்து பிள்ளைகளுக்கு
         பிறபொருள் எதிரிகள் கிடைக்கும். எனினும் குழந்தை பிறந்து முதற் சில
         நாட்களுக்கு வழங்கப்படும் தாய்ப்பாலிலுள்ள (சீம்பால்) அதிக
         பிறபொருள் எதிரிகள் கொண்டது. இது இயற்கையாகப் பெற்ற மந்தமான
         நிர்ப்பீடனம் எனப்படும்.

பொதுவான நிர்ப்பீடனம் (Non-Specific Immunity)
இது சுகதேகி மனிதர்களில் பொதுவான பாதுகாப்புப் பொறிமுறையாகும்.
இது பொதுவாக எல்லா நோய் நுண்ணங்கிகளுக்கும் எதிராகத் தொழிற்படும்.
இது பலவழிகளில் கிடைக்கிறது.

1. தோல் மற்றும் சீதமென்சவ்வு ஆகியன மூலம்.
2. உடற்பாய்மத்தில் அடங்கியுள்ள பிறபொருள் எதிரிகள் மூலம்.
3. தின்குழியச் செயல் மூலம்.

தோலிற்கு வெளியே கொம்புருப்படை காணப்படுவதனால் தோலினூடாக
   நுண்ணங்கிகள் உட்செல்லாது. தோலில் உருவாகும் வியர்வை,
   நெய்ச்சுரப்பிகள் போன்றன. நுண்ணுயிர்க் கொல்லிப் பதார்த்தங்களைக்
   கொண்டிருப்பதால் தோலின் மீது எற்படும் நோய்விளைவிக்கும்
   நுண்ணங்கிகளின் வளர்ச்சியைத் தடுக்கும்.

சுவாசப்பையிலுள்ள சீதமென்சவ்வு மூலமாக சீதம் சுரக்கப்படும்.
   சுவாசப்பாதையினூடாக உற்புகும் நுண்ணங்கிகள் சீதத்துடன்
   வெளியேற்றப்படும். உணவுக்கால்வாயினுள் செல்லும் நுண்ணங்கிகள்
   உணவுக்கால்வாயிலுள்ள ஜதரோக்குளோரிக்மிலத்தால் அழிக்கப்படும்.

உமிழ்நீர், கண்ணீர் ஆகியவற்றில் அடங்கியுள்ள இலைசோசைம் எனும்
   நொதியம் பற்றீரியாவின் கலச்சுவரை அழிக்கும். உடலிலுள்ள சில
   இரசாயனப் பொருள்கள், நோய்க்காரணி நுண்ணங்கிகளுக்கு அவசியமான
   இரும்புடன் சேர்வதால் அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான இரும்பை
   கிடைக்காது செய்து அவற்றைக் கட்டுப்படுத்தும்.

ஏதாவது நுண்ணங்கிகள் குருதியினுள் உட்சென்றால் நிணநீர்த்
   தொகுதியிலுள்ள பல்வேறு கலங்களால் இவை தின்குழியச் செயல் மூலம்  
   அழிக்கப்படும்.

குருதியுறைதல் செயன்முறை

Ca2+ அயன், பைபிரினோஜன், புரோத்துரம்பின் ஆகியன குருதித்
   திரவவிழையத்தில் காணப்படுகின்றன. இவற்றினிடையே நிகழும்
   இடைத்தாக்கத்தின் மூலமே குருதி உறைகின்றது.
குருதிச்சிறுதட்டுகளில் காணப்படும் துரொம்போபிளாஸ்ரின்
   முக்கியபங்கு வகிக்கிறது.
இப் பைபிரின் வலை குருதிக்கலங்கள் உடலில் இருந்து குருதிக்கலங்கள் வெளியேறுவதை தடை செய்யும்.

குருதி உடலினுள் குருதிக்கலன்களினூடாகச் செல்லும்போது உறைவதில்லை. ஏனெனில் ஈரலினால் சுரக்கப்படும் Heparin எனும் பதார்த்தம் உடலகக் குருதியுறைதலைத் தடை செய்வதனால் ஆகும்.

விற்றமின் K குருதியுறைதலைத் தூண்டுகிறது.

குருதி இனங்கள்(Blood Group)

மனிதனின் குருதியில் செங்குருதிக்கலங்களில் விசேடமான புரதங்கள், உடலெதிரியாக்கிகள் ஆகியன காணப்படுவதால் காணப்படுவதனால் குருதி  A,B,AB,O எனும் நான்கு இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
குருதியினங்களை நான்கு வகையாகப் பிரிக்கமுடியும் என கார்ன்ஸ் லான்ஸ்ரைனர் எனும் வைத்தியர் முதன் முதலில் கண்டு பிடித்தார்.
குருதிக் குறுக்குப்பாய்ச்சல்

இரத்த தானத்தின்போது சேகரிக்கப்படும் குருதி ஆனது குறிக்கப்பட்ட நிபந்தனைகளில் இரத்தவங்கிகளில் சேகரிக்கப்பட்டுக் காணப்படுகின்றது.

ஓரு மனிதருக்கு குருதி தேவைப்படும் சந்தர்ப்பங்கள்
1. விபத்தின் காரணமாக குருதிப் பெருக்கு ஏற்பட்ட ஒருவருக்கு
2. அறுவை சிகிச்சையின் போது குருதிப் பெருக்கு ஏற்பட்ட ஒருவருக்கு
3. நோய்கள் காரணமாக குருதிப்பற்றாக்குறை ஏற்பட்ட ஒருவருக்கு
    செயற்கை முறையில் உடலுக்குக் குருதியை வழங்குதலே குருதிக்
    குறுக்குப்பாய்ச்சல் எனப்படும்.

குருதி வாங்கி
குருதி குறுக்குப்பாய்ச்சலின் போது குருதியைப் பெறுபவர் குருதி வாங்கி எனப்படுவார்.

குருதி வழங்கி
குருதியை அளிப்பவர் குருதி வழங்கி எனப்படுவார்.

மேலும் குருதி வழங்கியினதும் குருதி வாங்கியினதும் குருதிமாதிரிகள் சோதிக்கப்பட்டு அவை ஒன்றுடன் ஒன்று பொருந்துமாயின் மட்டுமே கருதி வழங்கப்படமுடியும்.
அவ்வாறு இருவரினதும் குருதி மாதிரிகள் பொருந்தாத நிலையில் குருதி வழங்கப்படுமாயின் குருதியைப் பெறுபவரின் உடலினுள் குருதி உறைந்து அவர் மரணத்தைத் தழுவநேரிடும்.

பொதுவாங்கி
எல்லா இனக் குருதிகளையும் பெறக்கூடிய குருதி இனத்தைக் கொண்டவர் பொதுவாங்கி எனப்படுவார்.
Eg:- AB இனக் குருதியைக் கொண்டவர்கள்

பொதுவழங்கி
எவ்வினக் குருதியைக் கொண்டவர்கட்கும் குருதியை வழங்கக்கூடிய குருதி இனத்தைக் கொண்டவர் பொதுவழங்கி எனப்படுவார்.
Eg:- O இனக் குருதியைக் கொண்டவர்கள்

குருதிச்சிறுதட்டுக்கள்( Platelets)

குருதியில் செங்குழியங்கள், வெண்குழியங்கள் தவிர குருதியில் வேறு
  வகையான கலங்களும் காணப்படுகின்றன. இவை குருதிச்சிறுதட்டுக்கள்
  எனப்படும்.
கருவற்ற, ஒழுங்கற்ற வடிவமுள்ள கலங்கள்.
1ml3 குருதியில்  2,50,000 குருதிச்சிறுதட்டுக்கள் காணப்படும்.
செவ்வென்பு மச்சையில் உருவாக்கப்படும்.

குருதிச்சிறுதட்டுக்களின் தொழில்கள்
1. உடலில் காயமேற்பட்டால் அதிலிருந்து குருதி வெளியேறும். இதன்போது
    ஏற்படும் தகைப்பின் காரணமாக குருதிச்சிறுதட்டின் சுவர் உடைந்து அதன்
    காரணமாக குருதி உறைவதனால் மேலும் குருதி வெளியேறுவது
    தடுக்கப்படும். மேலும் குருதி உறைதலில் வேறு பல பதார்த்தங்களும்
    பங்களிப்புச் செய்கின்றன.      

Sunday, June 7, 2015

வெண்குருதிக் கலங்கள்/ வெண்குழியங்கள் (White Blood Cells/ Leucocytes)

இவை செங்குழியங்களை விடப்பெரியவை.
600 செங்குழியங்கள்: 1 வெண்குழியம் எனும் விகிதத்தில் காணப்படும்.
இவை கருவைக் கொண்டவை.
ஆனால் எவ்விதமான நிறப்பொருட்களும் காணப்படாது.
மனித உடலில் 1ml3 குருதியில் அண்ணளவாக 4,000 - 11,000 வரையான
   வெண்குருதிக் கலங்கள் காணப்படும்.
இவை செவ்வென்புமச்சையில் உருவாக்கப்படும். (என்பு மச்சையில் உள்ள            தண்டுக்கலங்கள்)
மேலும் வெண்குழியங்களின் குழியவுருவில் காணப்படும் சிறுமணிகள்
   காணப்படும். அடிப்படையில் இவை இருவகைப்படும்.

1. சிறுமணிகொண்ட வெண்குழியங்கள்.
2. சிறுமணியற்ற வெண்குழியங்கள்.

வெண்குழியத்தின் தொழில்கள்
1. வெண்குழியங்களின் அமீபா அசைவின் மூலம் உடலினுள் புகும்
    நோய்க்காரணிகளான பற்றீரியா, வைரசு ஆகியவற்றைப் பிடித்து விழுங்கும்.
2. வெண்குழியங்கள் சில நோய்க்காரணிகளுக்கு எதிராக  
    பிறபொருளெதிரிகளைச் சுரக்கின்றன.

இருகிளைச்சாவி/ இணைக்கவர்ச்சுட்டி

1. அங்கிகளை விரைவில் அடையாளப்படுத்துவதற்கு இனங்களின்
   இயல்புகளை இணைக்கவர் சோடியாக தயார் செய்யும் அட்டவணை ஆகும்.
2. பல இயல்புகளைப் பயன்படுத்துவதன் மூலம்
   இணைக்கவர்ச்சுட்டிதயாரிக்கப்படும். எனினும் அங்கிகளின் பருமன், நீளம்,
   வாழிடம், உணவு வழக்கம், தொழில், முளையவியல் போன்ற இயல்புகள்
    பன்படுத்தப்படமாட்டாது.
3. பொதுவாக இணைக்கவர்சுட்டி/ இருகிளைச்சாவியில் அங்கிகளின் புற
    இயல்புகளே பயன் படுத்தப்படும்.
4. பெரும்பாலும் அங்கிகளின் அக/ உள் கட்டமைப்புத் தொடர்பான இயல்புகள்
    பயன் படுத்தப்படுவதில்லை/ சில வேளைகளில் பயன்படுத்தலாம்.
5. பொதுவாக இருகிளைச்சாவி மூலம் கூர்ப்புப்பாதையை விளக்கமுடியாது.
6. இது இரு வகைப்படும்.

      1. இயற்கையான இருகிளைச்சாவி - அங்கிகளின் கூர்ப்புத்தொடர்பை விளக்கும்.
      2. செயற்கையான இருகிளைச்சாவி - அங்கிகளின் கூர்ப்புத்தொடர்பை விளக்காது.

பின்வரும் அங்கிகளைப் பயன்படுத்தி இருகிளைச்சாவியைத் தயாரிக்குக.

கரப்பான், சுறா, பூனை, காகம், மனிதன்
1. (a) சிறகு உடையது - (2)
    (b) சிறகு அற்றது - (3)

2. (a) அலகு உடையது - காகம்
    (b) அலகு அற்றது - கரப்பான்

3. (a) அவயவம் உடையது - (4)
    (b) அவயவம் அற்றது - சுறா

4. (a) வால் உடையது - பூனை
    (b) வால் அற்றது - மனிதன்