Showing posts with label Chemistry. Show all posts
Showing posts with label Chemistry. Show all posts

Friday, May 8, 2026

அற்கீனின் தாக்கங்கள் - Reactions of Alkene

புறப்பீனின் தாக்கங்கள்

தாக்கி CH₃-CH=CH₂

தாக்கங்கள்

01. நீரேற்றல் தாக்கம்

  • தாக்கு பொருள்: Dil. H₂SO₄

    • விளைவு: CH₃-CH(OH)-CH

  • தாக்கு பொருள்: Con. H₂SO

    • இடைநிலை: CH₃-CH(OSO₃H)-CH

    • (நீர் சேர்க்கும் போது)  இறுதி விளைபொருள்: CH₃-CH(OH)-CH

02. பேயரின் தாக்கம்

  • தாக்கு பொருள்: OH- / KMnO₄

    • விளைவு: CH₃-CH(OH)-CH₂OH

03. ஐதரசனேற்றல் தாக்கம்

  • தாக்கு பொருள்: Ni / H₂, \வெப்பம்

    • விளைவு: CH₃-CH₂-CH

  • தாக்கு பொருள்: Pt / H₂ or Pd / H

    • விளைவு: CH₃-CH₂-CH

04. புரோமினேற்றல் தாக்கம்

  • தாக்கு பொருள்: Br₂ / CCl

    • விளைவு: CH₃-CH(Br)-CH₂Br

05. ஐதரசன் ஏலைட்டு உடனான தாக்கம்
      மார்க்கோணிக்கோவின் விதியின் அடிப்படையில் நடைபெறும்

  • தாக்கு பொருள்: HBr

    • விளைவு: CH₃-CH(Br)-CH

  • தாக்கு பொருள்: H₂O₂ or R₂O₂ / HBr (முரண் மார்க்கோணிக்கோவின் விதியின் அடிப்படையில் நடைபெறும்)

    • விளைவு: CH₃-CH₂-CH₂Br

05. புரோமின் நீருடனான தாக்கம்

  • தாக்கு பொருள்: Br₂ / H₂O

    • ஒன்றுக்கு மேற்பட்ட விளைவுகள் பெறப்படும் (Options):

      • CH₃-CH(Br)-CH₂Br

      • CH₃-CH(Br)-CH

      • CH₃-CH(OH)-CH₂Br

      • CH₃-CH(OH)-CH

Thursday, May 7, 2026

சேதனச் சேர்வைகளுக்கான IUPAC பெயரீடு

சேதனச் சேர்வை ஒன்றிற்கான IUPAC பெயரீடு எழுதும் போது அதில் ஒரு கூட்டம் மாத்திரம் காணப்படுமாயின் அது பிரதான தொழிற்பாட்டுக் கூட்டமாகும். எனினும் ஒன்றிற்கு மேற்பட்ட கூட்டங்கள் காணப்படுகின்ற போது அதில் ஒரு  கூட்டம் பிரதான தொழிற்பாட்டுக் கூட்டம் எனவும், ஏனையவை கிளைகளாகவும்  கொள்ளப்பட்டு IUPAC பெயரீடு எழுதப்படுகின்ற போது இதற்காக பின்வரும் தரப்படுத்தல் அட்டவணை பயன்படுத்தப்படுகின்றது.

கூட்டம்தொழிற்பாட்டுக் கூட்டபெயர்கிளைப் பெயர்
-C(=O)-OHoic acid-
-C(=O)-O-Roate-
-C(=O)-Cloyl chloride-
-C(=O)-NH₂amide-
-C(=O)-Haloxo / formyl
-C-C(=O)-Coneoxo
-OHolhydroxy
-C≡ C-yne-
-C = C-ene-
-C - C-ane-

முக்கிய குறிப்புகள்:

  • -NH, -X, -R, -O-R, -CN இவை அனைத்தும் எப்போதும் கிளைகளாகவே காணப்படும்.

சேதன இரசாயனவியல் - Organic Chemistry

  • காபனை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இரசாயனமே சேதன இரசாயனவியல் ஆகும்.

Example:-

  • CH₃ - C(=O) - OH         — காபொட்சிலிக் அமிலம்

  • CH₃ - C(=O) - O - CH₃  — எசுத்தர்

  • CH₃ - C(=O) - Cl           — அமில குளோரைட்டு

  • CH₃ - C(=O) - NH₂       — ஏமைட்டு

  • CH₃ - C(=O) - H           — அல்டிகைட்டு

  • CH₃ - C(=O) - CH₃       — கீற்றோன்

  • CH₃ - CH₂ - OH           — அற்ககோல்

  • CH₃ - CH₂ - NH₂          — அமைன்

Thursday, November 6, 2025

எரிசோடா (NaOH) உற்பத்தி

தூய NaCl நீர்க்கரைசலை (பிரையின் கரைசலை) மின்பகுப்புச் செய்வதால் எரிசேடா (NaOH) உற்பத்தி செய்யப்படுகிறது.

மின்பகுப்பு மூலம் எரிசேடாவை உற்பத்தி செய்யும் கலங்கள் "காரகுளோரிக்கலம்" என அழைக்கப்படும்.

இது மூன்று வகைப்படும்.

1. இரசக் கலமுறை
2. பிரிமென்றகட்டுப் கலமுறை
3. மென்சவ்வுக் கலமுறை

ஆரம்ப காலத்தில் இரசக் கல முறையை அடிப்படையாகக் கொண்டே உற்பத்தி செய்யப்பட்டது. எனினும், சூழலுக்கு இரசம் விடுவிக்கப்படுவது இம்முறையின் பிரதிகூலமாகும்.

ஆனால், பிரிமென்றகட்டுக் கலமும் மென்சவ்வுக்கலமும் பெருமளவில் ஒன்றையொன்று ஒத்தன. ஆனால் மென்சவ்வுக்கலத்தில் பிரிமென்றகட்டுக்குப் பதிலாக அனோட்டையும் கதோட்டையும் வேறுபடுத்துவதற்காக Na⁺ அயன்கள் செல்லக்கூடிய மென்சவ்வு பயன்படுத்தப்படும்.

Wednesday, November 5, 2025

மகனீசியம் (Mg) பிரித்தெடுப்பு - டவ்(Dow) முறை

Mg அடங்கிய மூலப்பொருட்கள் தாவரங்களிலும், கடல் நீரிலும் காணப்படுகிறது.

கடல் நீரில் Na⁺இற்கு அடுத்தபடியாக Mg²⁺அடங்கியிருக்கும்.(0.13%)

NaCl உற்பத்தியில் மூன்றாவது பாத்தியில் காணப்படும் தாயத்திரவம் /பிற்றைன் இதற்கு மூலப்பொருளாக பயன்படும்.

பின்வரும் 4 படிமுறைகளைக் கொண்டது.

படிமுறை - 1 (CaO இன் தயாரிப்பு)

CaCO₃, டொலமைற்று ( CaCO₃, MgCO₃) என்பன வெப்பமாக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.

கிடைக்கும் CaO, CaCO₃ மாசாகக் காணப்படுவது ஓர் பிரதிகூலமாகும்.

படிமுறை - 2 (Mg(OH)₂ இன் உற்பத்தி)

முதலாம் படிமுறையில் உற்பத்தி செய்யப்பட்ட ஒட்சைட்டுக்கள் (CaO, MgO) பிற்றைன் கரைசலுடன் தாக்கமுறச் செய்யப்படும்.

Ca(OH)₂ இன் கரைதிறன் பெருக்கமானது (Ksp) Mg(OH)₂ இன் கரைதிறன் பெருக்கத்திலும்(Ksp) அதிகமாகையால் Mg(OH)₂ படியும். எனவே Ca(OH)₂ ஐ சேர்ப்பதன் மூலம் இன்னும் Mg(OH)₂ ஐ படிவடையச் செய்யலாம்.

படிமுறை - 3

Mg(OH)₂ இனை வடித்து வேறாக்கி செறிந்த HCl உடன் தாக்கமுறச் செய்து MgCl₂ உற்பத்தி செய்யப்படும்.

டொலமைற்று பயன்படுத்துகையில் அதில் காணப்படும் MgOஆனது நீரில் கரையாமல் Mg(OH)₂ உடன் சேர்ந்து காணப்படும்.

படிமுறை - 4

MgCl₂ இன் உலர் நிறையில் 16% நீர் உள்ளது. இதனால் MgCl₂ வெப்பமேற்றப்பட்டு அதிலடங்கியுள்ள நீர் ஆவியாக்கப்படும்.

MgCl₂.2H₂O ஐ உருக்கும் போது அதில் அடங்கியிருக்கும் நீரும் அகற்றப்படும்.

தொகுதியின் வெப்பநிலை 700 - 800 ஆக காணப்படுவதுடன் MgCl₂ இன் உருகுநிலை 714℃ ஆகவும் Mg இன் உருகுநிலை 650℃ ஆகவும் காணப்படுவதனால் அவ்வுருகுநிலைகளுக்கு அவ்வுருகுநிலைகளுக்கு மேற்பட்ட வெப்பநிலையில் உருகிய உப்பை பேணிவருதல் வேண்டும்.

உருகிய MgCl₂ ஐ காரியத்தை Anode ஆகவும் உருக்கை Cathode ஆகவும் பயன்படுத்தி மின்பகுப்பு செய்யும் போது Anode இல் Cl₂ வாயுவும் Cathode இல் Mg உம் படிவடையும்.
Anode ஐ நோக்கிச் செல்லும் அயன்    - Cl⁻
Cathode ஐ நோக்கிச் செல்லும் அயன் - Na⁺

Anode இல் நடைபெறும் தாக்கம் 
Cathode இல் நடைபெறும் தாக்கம்
திரவ Mg இன் அடர்த்தி - 1.584gcm³           உருகிய MgCl₂ இன் அடர்த்தி - 1.687gcm³ 

உருகிய MgCl₂ இன் அடர்த்தியிலும் பார்க்க திரவ Mg இன் அடர்த்தி குறைவானதாகையால் உருகிய MgCl₂ இன் மீது திரவ Mg மிதக்கும்.

இங்கு Anode இல் வெளிவரும் Cl₂ வாயு அனது HCl தயாரிப்புக்கு  உட்படுத்தப்பட்டு படிமுறை 3 இல் மீளவும் Mg(OH)₂ உடன் தாக்கம் புரியச் செய்யப்பட்டு MgCl₂ தயாரிப்புக்கு பயன்படும்.

Mg இன் பயன்கள்

ஆகாய விமானம், வாகனங்களின் உற்பத்திக்கான உறுதியான இலேசான கலப்புலோக சட்டங்களின் தயாரிப்புக்கு பயன்படும்.

மேற்படி முறையின் பிரதிகூலம்

இங்கு CaCO₃ ஐ வெப்பப்படுத்தல் எரிபொருள் பாவனையின்போது வெளியாகும் வாயுவான CO₂ வளிமாசடைதலை ஏற்படுத்தும்.

Tuesday, November 4, 2025

சல்பூரிக்கமிலம் உற்பத்தி செய்தல் (தொடுகை முறை)



மூலப்பொருட்கள் - கந்தகம் (S), கந்தக தாதுக்கள் (PbS, CuS, ZnS), வளி, நீர்

1. ஊக்கி - V₂O₅ (வனேடியம் ஐ ஒட்சைட்டு)
2. தூண்டி - K₂SO₄
3. அமுக்கம் - (1 atm)
4. வெப்பநிலை - (450 ℃)

மேற்படி நிபந்தனைகள் பிரயோகிக்கப்படுகையிலே 96% - 98% விளைவு தோன்றுகிறது.

உயர் வெப்பநிலையில் உலோக அரண்கள் அரிப்பிற்குள்ளாகும்.

உயர் அமுக்கத்தை ஏற்படுத்துவதற்கான செலவு அதிகமானதாகையால்  1 atm அமுக்கம் பொதுமானது.

தொகுதியை குளிர்த்தும் போது நீராவியை பயன்படுத்தி மின் பிறப்பிக்க பயன்படும்.

SO₃ ஐ நீரில் கரைக்காமல் செறிந்த H₂SO₄ அமிலத்தில் கரைப்பதற்குக் காரணம் நீரில் கரைத்தால் அடர்வு கூடிய  மூடுபனி உருவாகும்.

SO₃ ஆனது செறிந்த H₂SO₄ இல் கரைக்கப்படுவதால் H₂S₂O₇(ஓலியம்) உருவாக்கப்படும்.

H₂SO₄ இன் பயன்கள்
1. பொசுபேற்று உரங்களின் பரும்படி தயாரிப்பு
     Ca₃(PO₄)₂ இலிருந்து Super Phosphate ஐ தயாரித்து குறுகிய காலத்தாவரங்களுக்கு         உரமாக பயன்படுத்த முடியும்.
2. அரசநீர் தயாரிப்பு
3. நீரகற்றும் கருவியாகப் பயன்படும்.
4. வாயுக்களை உலர்த்துதல்
5. பற்றரி அமிலத் தயாரிப்பு
6. சாய வகை பொருள்கள், வெடிபொருள்கள் மற்றும் ஒளடங்கள் உற்பத்தி
7. அமோனியம் சல்பேற்று ((NH₄)₂SO₄) பசளை உற்பத்தி
8. ரெயோன் உட்பட செயற்கை நார் மற்றும் பிளாத்திக்கு உற்பத்தி

நைத்திரிக்கமில உற்பத்தி (ஒசுவால்ட் செயன் முறை)

 

மூலப்பொருட்கள் - NH3(g),வளிமண்டல வளி, நீர்

இங்கு உயர் அமுக்கத்தை பேணுவதன் மூலம் ஊக்கியின் மேற்பரப்பில் தாக்கி மூலக்கூறுகளின் மோதல் வீதம் அதிகரிக்கப்படும்.

1.ஊக்கி - Pt/Rh
2. வெப்பநிலை - 810 - 850℃ 

NH3(g) இன் பூரண ஒட்சியேற்றத்தை நிச்சயப்படுத்த மேலதிக வளி பயன்படும்.

NH3(g) இன் பயன்பாடுகள்

1.வெடிமருந்து தயாரிப்பு (TNT, TGN)
2. வளமாக்கி தயாரிப்பு (NH4NO3)
3. அரசநீர் தயாரிப்பு (Con HNO3 + Con H2SO4)
4. தொழில்முறையில் முக்கியத்துவம் வாய்ந்த NO3⁻ தயாரிப்பில் பயன்படும்.
    NaNO₃ - இறைச்சியின் நற்காப்பி
    AgNO₃ - ஒளிப்படத்தாள், கடதாசி தயாரிப்பு
    KNO₃ - வெடிமருந்து, வளமாக்கி தயாரிப்பு
5. உலோக பற்றாசு பிடித்தலின் போத உலோக மேற்பரப்பை சுத்திகரிக்கப்  
    பயன்படுகிறது.

அமோனியா உற்பத்தி (ஏபர் - பொஷ் முறை)


மூலப்பொருட்கள் - N2, H2

திரவ வளியை பகுதிபடக் காய்ச்சி வடிப்பதன் மூலம் Nபெறப்படும்.
இயற்கை வாயு (CH4), நப்தா (C6H14) போன்றவற்றை Oஉடன் அல்லது நீராவியுடன் பகுதியாக ஒட்சியேற்றி  Hபெறப்படும்.

O2  உடன் பகுதி ஒட்சியேற்றம்


நீராவி H2O(g) உடன் பகுதி ஒட்சியேற்றம்

1. மெதேன்



2. நப்தா
Nஇற்கும் Hஇற்கும் இடையிலான தாக்கம் பின்வருமாறு நடைபெறும்.
1. ஊக்கி - நுண்துளையாக்கப்பட்ட Fe
2. தூண்டி - K2O / Al2O3
3. அமுக்கம் - (250 - 300 atm)
4. வெப்பநிலை - (450 - 500 'C)

இங்கு உயர் அமுக்கமும், தாழ் வெப்பநிலையும் பேணப்படல் வேண்டும்.

வெப்பநிலையை மேலும் குறைக்கும் போது தாக்க ஏவற்சக்தியை மீற சக்தி போதாமையினால் சிறப்பு வெப்பநிலையாக 450 - 500 'C பேணப்படுறது.

இங்கு Fe இன் தாக்க மேற்பரப்பை அதிகரிப்பதன் மூலம் தாக்கவீதம் அதிகரிக்கப்படும்.

மேற்படி தாக்கம் புறவெப்பத்தாக்கம் ஆதலால் தொகுதியை குளிர்வித்தல் வேண்டும்.

இத்தொகுதியிலிருந்து விளைவாக பெறப்படும் NH3 ஐ அகற்றுவதன் மூலம் முற்தாக்கத்தை சாதகமாக்கலாம்.

உயரமுக்கம் காரணமாக உபகரண பராமரிப்பு செலவு அதிகமாகும்.

NH3 இன் பயன்கள்
1. HNO3 தயாரிப்பில் பயன்படும்.
2. யூரியா தயாரிப்பு
3. இறப்பர் பால் திரளள் அடைவதைத் தடுத்தல்.
4. பண்படுத்தா எண்ணெயிலுள்ள அமிலத்தை நடுநிலையாக்க பயன்படும்.
5. வளமாக்கி தயாரிப்பு

Friday, January 5, 2024

சுவாலைப் பரிசோதனை (Flame Test)

பெரும்பாலான s தொகுப்பு மூலகங்களும் d தொகுப்பு மூலகங்களில் Cu2+ அயனும் வேறு சில அயன்களும் சுவாலைப் பரிசோதனைக்கு விடையளிக்கும்.

இதற்கு பிளாட்டினக்கோல் அல்லது காரியக்கோல் பயன்படுத்தப்படும்.

ஆவிப்பறப்புக் கூடிய HCl அல்லது HBr அல்லது HI என்பன பயன்படுத்தப்படலாம்.

காரியக் கோலானது HCl இல் அமிழ்த்தி எடுக்கப்பட்டு பின் பரிசோதிக்கப்படவேண்டிய கரைசலில் துவைத்து சுவாலையில் பிடிக்கப்படும். இதற்கு அமைய சுவாலையில் பெறப்படும் நிறத்திற்கு அமைய கற்றயன்கள் இனங்காணப்படும்.

சுவாலைச் சோதனைக்கு s தொகுப்பைச் சேர்ந்த மூலக அயன்களில் Be2+, Mg2+ ஆகியவை விடையளிக்க மாட்டாது.

Friday, August 12, 2022

சேதன இரசாயனவியல்

காபன் அதிக எண்ணிக்கையான சேதனச்சேர்வைகளை உருவாக்குவதற்கான காரணங்கள்

1. காபன் அணு இலத்திரன்களை ஏற்றோ அல்லது இழந்தோ பிணைப்புக்களை ஏற்படுத்துவதை விட பலமான பங்கீட்டுவலுப் பிணைப்பைத் தோற்றுவிப்பதிலேயே அதிக நாட்டத்தைக் காட்டுகின்றது.

2. காபனின் நால்வலுவளவுத் தன்மைக் காட்டும் தன்மை

3. காபன் தனது அணுக்களுடனும், வேறு அணுக்களுடனும் இரட்டை, மும்மைப் பிணைப்புக்களைத் தோற்றுவிக்கக் கூடியது.

4. காபன் அணுக்களின் தொடர் பிணைப்பாக்கும் தன்மை, இதனால் நீளவடிவான, சங்கிலி, கிளைகொண்ட சங்கிலி, வளையச் சேர்வைகளையும் உருவாக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றது.

Note:- 

1. சேதனச் சேர்வைகளில் காணப்படும் மூலகங்களின் அளவு ரீதியான ஒழுங்குC > H > O > N > Cl > Br > I > F > S > P எனக் காணப்படும்.

2. சில சேதனச் சேர்வைகளில் உலோகங்களும் காணப்படுகின்றன.

3. சேதனச் சேர்வையைத் தொடர்ந்து வெப்பமாக்கும் போது திண்ம மீதி பெறப்படு மாயின் அதில் உலோகம் உண்டெனலாம். 


Thursday, August 11, 2022

சேதன இரசாயனவியல்

 சேதன இரசாயனவியல் பற்றிய அறிமுகம்

ஆரம்ப காலங்களில் உயிர் அங்கிகளில் இருந்தே சேதனச் சேர்வைகள் உருவாகுவதாக கருதப்பட்டது. ஆனால் உயிர் அங்கிகளுக்கு வெளியிலும் சேதனச் சேர்வைகள் உருவாக்கப்படலாம். எனச் செய்து காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, அசேதனச்சேர்வை ஒன்றில் இருந்து முதலில் உருவாக்கப்பட்ட சேதனச் சேர்வை CO(NH2)2 - யூரியா ஆகும். 

இச்சேர்வையை முதலில் உருவாக்கியவர் Wohler என்பவராவார்.

Note:- 

 1. மூலகங்களில் இருந்து முதலில் உருவாக்கப்பட்ட சேதனச்சேர்வை 

    CH3COOH ஆகும். இது Kolbe என்பவரால் உருவாக்கப்பட்டது.

2.காபனையும் அதன் சேர்வைகளையும் பற்றிய  இரசாயனமாகையால் இது காபன் இரசாயனம் எனவும் அழைக்கப்படுகின்றது.

3. அனேகமான சேதனச் சேர்வைகள் உயிர் அங்கிகளில் இருந்தே உருவாகின்றது. 

Thursday, April 21, 2022

கட்டமைப்பும் பிணைப்பும்

 இரசாயனப் பிணைப்புக்கள் உருவாதல்

                                          

மூலகங்கள் உறுதிநிலை அடைவதற்காக பிணைப்புக்களை உருவாக்கு கின்றன.
இரசாயனப் பிணைப்புக்கள் தோற்றுவிக்கப்படும்போது சக்தி வெளியேறு வதனால் உருவாகும் கூறுகள் உறுதியடைகிறது.
பிணைப்புக்களைத் தோற்றுவிப்பதில் இலத்திரன் ஏற்றலோ அல்லது இழத்தலோ அல்லது பங்கீடு செய்தலோ நடைபெறுவதன் மூலம் தனது ஈற்றமைப்பை இயன்றவரை பூர்த்தி செய்கிறது இது எண்மவிதி அல்லது சடத்துவ விதி எனப்படும்.
ஆனால் இவ்விதிக்கு உட்படாத மூலக்கூறுகள் காணப்படுகின்றது.

இரசாயனப் பிணைப்பின் வகைகள்
இரசாயனப் பிணைப்புக்களில் இலத்திரன்கள் சம்பந்தப்படுகின்றதன் அடிப்படையில் பிணைப்புக்கள் பின்வரும் வகைகளாகப் பிரிக்கப்படும்.
இரசாயனப் பிணைப்புக்களில் இலத்திரன்கள் சம்பந்தப்படுகின்றதன் அடிப்படையில் பிணைப்புக்கள் பின்வரும் வகைகளாகப் பிரிக்கப்படும்.
1. பங்கீட்டு வலுப்பிணைப்பு
2. ஈதற் பிணைப்பு
3. அயன் பிணைப்பு
4. உலோகப் பிணைப்பு

இரசாயனப் பிணைப்புக்களில் இலத்திரன்கள் சம்பந்தப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்கள்
1. மூலக அணுவின் ஈற்றோட்டு இலத்திரன் எண்ணிக்கைக்கும் ஆனால்  
    உருவாகும் பிணைப்புக்களின் எண்ணிக்கைக்குமிடையே தொடர்பு 
    காணப்படுகின்றது.
2. நீர்க்கரைசல்களை மின்பகுக்கும் போது புதிய விளைவுகள் தோன்றுகிறது. 
    இங்கு பிணைப்புக்கள் உடைதலும் உருவாதலும் நடைபெறுகிறது.
3. மின்கலங்களின் இயக்கத்தின் போது மின் உருவாக்கப்படுகின்றது. இதன் 
    போது பிணைப்புக்கள் உடைதலும், உருவாதலும் நடைபெறுகிறது.

Tuesday, June 12, 2018

நியம மூலர் அயனாக்கல் வெப்பவுள்ளுறை ∆HөI = (+)

நியம நிபந்தனையில் 1 mol வாயு அணுக்களில் இருந்து இலத்திரனை அகற்றி வாயு நிலையிலுள்ள நேரயன்களைத் தோற்றுவிக்கும் போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றமாகும்.

இது எப்போதும் உறிஞ்சப்படும் வெப்பமாகும்.

ஒரு மூலக அணுவிலிருந்து முதலாம், இரண்டாம், மூன்றாம் இலத்திரன்களை அகற்றும் போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றம் முறையே முதலாம் அயனாக்கல் சக்தி(I1), இரண்டாம் அயனாக்கற்சக்தி(I2) , மூன்றாம் அயனாக்கற்சக்தி (I3) எனப்படும்.
ஒரு மூலகத்தில் இருந்து அடுத்தடுத்து இலத்திரன்களை அகற்றும்போது ஏற்படும் தொடர் அயனாக்கற்சக்திகள் அதிகரித்துக் கொண்டே செல்லும்.
I1< I2< I3,………..In

Friday, June 8, 2018

சராசரி பிணைப்பு சக்தி or சராசரி பிணைப்பு கூட்டல் பிரிகை சக்தி

ஒரே விதமான ஒன்றுக்கு மேற்பட்ட பிணைப்புக்களைக் கொண்ட ஒரு மூலக்கூறின்  1mol பிணைப்புடன் சம்பந்தப்படும் வெப்பவுள்ளுறை மாற்றமாகும்.
Note:- 
1.  இங்கு ஒவ்வொரு பிணைப்புக்களிலுமுள்ள பிணைப்புச் சக்தி 
     சமனல்ல. வேறுபட்டதாகவே காணப்படும். எனவே கணிப்பதற்கு 
    இலகுவாக சராசரி பிணைப்பு சக்தி பயன்படுத்தப்படுகின்றது. 

பிணைப்புச் சக்தியுடன் தொடர்பான சமன்பாடுகள்
பிணைப்புச் சக்திகள் தொடர்பான தரவுகள் தரப்படுமிடத்து ஒரு தாக்கத்திற்குரிய வெப்பவுள்ளுறை மாற்றம் பின்வருமாறு கணிக்கப்படுகிறது.

Tuesday, May 15, 2018

பிரிகை சக்தி or மொத்த பிணைப்புச் சக்தி

வாயு நிலையிலுள்ள  1mol சேர்வையில் காணப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட பிணைப்பை உடைத்து வாயுநிலை அணுக்களாக மாற்றப்படும் போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றமாகும்.


நியம பிணைப்பு சக்தி or நியம பிணைப்பு கூட்டல் பிரிகை சக்தி (∆H°D)(Dissociation)

நியம நிபந்தனையில் வாயு நிலையிலுள்ள  1mol பிணைப்பை உடைத்து வாயுநிலை அணுக்களாக மாற்றப்படும் போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றமாகும்.
Note:- 
 1.  பிணைப்புக்கள் உடைக்கப்படும் போது சக்தி உறிஞ்சப்படும்.      
      பிணைப்பு  உருவாக்கப்படும் போது சக்தி வெளிவிடப்படும்.