Showing posts with label Biology. Show all posts
Showing posts with label Biology. Show all posts

Saturday, November 8, 2025

கலவட்டம் - Cell Cycle

ஒரு கலப்பரிவின் முடிவுக்கும் அடுத்த கலப்பிரிவின் முடிவிற்குமிடையே ஒரு கலத்தினுள் நடைபெறும் சகல தொடரான நிகழ்வுகளும் ஒருங்கே கலவட்டம் என அழைக்கப்படும்.

கலப்பிரிவின் இறுதியில் பெற்றார்க் கலத்தைப் போன்ற பிறப்புரிமை ரீதியில் ஒத்த இரண்டு மகட்கலங்கள் உருவாக்கப்படும்.

இனப்பெருக்கமானது இங்கிகளின் பெருக்கத்தை உள்ளடக்கும் இதற்காக கலங்கள் கலப்பிரிவுக்கு உள்ளாகும்.

தனிக்கல அங்கிகளில், பக்ற்ரீயாக்களில் கலப்பிரிவும் இனப்பெருக்கமும் பொதுவாக ஒன்றாகும்.

தனிக்கல அங்கிகளில் கலம் இலகுவில் இரு பாதிகளாக பிரிவடைந்து இரு புதிய கலங்கள் உருவாகும்.

பல்கல அங்கிகளில் இனப்பெருக்கம் அதிகளவு சிக்கலானது இவற்றில் தனித்துவமான இனப்பெருக்க உறுப்புக்களில் தனிக்கல புணரிகள் உருவாக்கப்படும்.

ஆண்களில் விந்தும் பெண்களில் முட்டையும் உருவாக்கப்படும் . இவை சேர்க்கையடைந்து கருக்கட்டப்பட்ட நுகத்தை உருவாக்கும். இதுவும் ஓர் தனிக்கலமாகும். இது தொடர்ந்து பிரிகையடைந்து பல்கலத்தினால் ஆன புதிய அங்கிகளை உருவாக்கும்.

கலங்கள் பிரிவடைவதற்கு முன்னர் பிறப்புரிமைச் செய்தியின் பிரதி தயாரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு பிரதியும் ஒவ்வொரு மகட்கலத்திற்கு வழங்கப்படுகின்றது.

புரோக்கரியோட்டாக்களில் பாரம்பரியச் செய்தி ஒரு தனியான வட்ட DNA இல் காணப்படும். ஆனால் இயூக்கரியோட்டாக்களில் வெவ்வேறு நீளமான நேரிய நிறமூர்த்தங்ளில் இவை காணப்படும்.

Tuesday, April 3, 2018

முன்சிறுகுடல்

1. Enterogastron / GIP
    இவ்வோமோன் சுரக்கப்படுவதற்கான தூண்டல் - உணவு 
    முன்சிறுகுடலுக்குள் செல்லல்.

தொழில் :
இரைப்பையின் சுவரைத் தாக்கி Gastrin சுரக்கப்படுதலை நிரோதித்தல்.

2. Secretin
   சுரக்கப்படுதலுக்கான தூண்டல் - உணவு முன்சிறுகுடலினுள் செல்லுதல், 
   அமில உணவு.
தொழில்கள் :-
1. ஈரற் கலங்களைத் தாக்கி பித்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல்.
2. சுதையியைத் தூண்டி NaHCO3, நீர், சீதம் போன்ற நொதியமற்ற கூறுகளின் 
    உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல்.

இரைப்பை

Gastrin
இரைப்பையின் சுவரிலுள்ள பு கலங்களால் சுரக்கப்படும்.
இவ்வோமோன் சுரக்கப்படுவதற்கான தூண்டல் - உணவு இரைப்பையின் சுவரைத் தொடுதல்.

தொழில் :-
இரைப்பையின் சுவரைத் தாக்கி / இரைப்பையின் சுவரிலுள்ள சுரப்பிகளைத் தூண்டி இரைப்பைச் சாற்றை சுரக்கச் செய்தல்.

சூல்வித்தகம்

பினவரும் ஓமோன்களை சுரக்கும்.

1. Oestrogen.
   முலைச்சுரப்பியின் கான்தொகுதியின் விருத்தியைத் தூண்டும்.

2. Progesterone
   முலைச்சுரப்பிகளிலுள்ள பாற் சுரப்பிகளின் விருத்தியை தூண்டி 
   பால்விடுவித்தலுக்கு ஆயத்தமாக்கும். கருப்பைச்சுவரின் எல்லைகளைப் 
   பேணும்.
   கபசுரப்பியின் பிற்பக்கச் சோணையால் Oxtocin விடுவிக்கப்படுவதை 
   நிரோதித்து கருப்பைச் சுவரின் உள்ள தசை சுருங்குவதைத் தடுக்கும்.
 3. HPL – Human Piacental Lactogen
    முலைச்சுரப்பியின் வளர்ச்சி, விருத்தி ஆகியவற்றைத் தூண்டி பால் 
    உற்பத்திக்கு உதவுதல்.

4. HCG – Human Chorionic Ganodotrophin.
   சூழ்வித்தகத்தால் Oestrogen, Progestron ஆகியவை சுரக்கப்படும் வரை 
   மஞ்சட்சடலத்தால் Oestrogen, Progestron ஆகியவை சுரக்கப்படுதலைத் 
   தூண்டுதல்.

5. HCS – Human Chorionic Somatomamotrophin.
   முதிர்முலவுருவின் வளர்ச்சியை தூண்டுதல்.
   முலைச் சுரப்பியின் விருத்தியை தூண்டுதல்
   அனுசேப வீதத்தைத் தூண்டுதல்.

விதை

Testesteron எனும் ஓமோனைச் சுரக்கும்.

Testesteron
விதையினுள்ள Leydding  கலங்களால் சுரக்கப்டும்.
ICSH ஆனது Leydig  கலங்களைத் தூண்டுவதால் சுரக்கப்படும்.

தொழில்கள் :-
1. ஆண்களில் துணைப் பாலியல்புகளை அதிகரித்தல் / விருத்தி செய்தல்.
2. ஆண்களில் விந்துற்பத்தியை தூண்டுதல்.

சூலகம்

பின்வரும் ஓமோன்களைச் சுரக்கும்.

1. Oestrogen
    சூலகத்திலுள்ள புடைப்புக்கலங்களால் அதிகளவு சுரக்கப்படும்.
    இவ்வோமன்கள் சுரக்கப்படுதலை FSH தூண்டும்.

தொழில்கள் :-
1. கருப்பையின் அகத்தோலை வளர்த்தல்.
2. கருப்பையின் அகத்தோலில் சுரப்பிகளை உருவாக்குதல்.
3. பெண்களில் துணைப்பாலியல்புகளை தூண்டுதல்.
4. பெண்களில் இலிங்க உணர்வை அதிகரிக்கச் செய்தல்.
5. குருதியில் உயர்செறிவில் காணப்படும் போது பின்னூட்டல் பொறிமுறை 
    மூலம் GnRH சுரக்கப்படுவதை நிரோதித்தல்.

2. Progestrone
   சூலகத்திலுள்ள மஞ்சள் சடலத்தால் சுரக்கப்படும்.
  முன்கபச்சுரப்பியால் சுரக்கப்படும் LH ஆனது மஞ்சட் சடலத்தைத் தூண்டி     
   Progestrone ஐ சுரக்கச் செய்யும்.

தொழில்கள் :
1. முளையம் உட்பதிக்கப்படுவதற்று கருப்பையின் சுரப்பு அவத்தையைப் 
    பேணல்.
2. கருப்பையின் அகத்தோலால் சுரப்புக்கள் சுரக்கப்படுவதை அதிகரிக்கச் 
    செய்தல்
3. பெண்களில் இலிங்க உணர்வை அதிகரிக்கச் செய்தல்.
4. குருதியில் உயர்செறிவில் காணப்படும் போது பின்னூட்டல் பொறிமுறை 
    மூலம் GnRH சுரக்கப்படுவதை நிரோதித்தல்.

3. Relaxin.
1. சூலகத்திலுள்ள மஞ்சள் சடலத்தால் சுரக்கப்படும்.
2. பெண்களில் குழந்தைப் பிறப்பு வேளையில் சுரக்கப்படும்.
3. ஆண்களில் முன்னிற்கு சுரப்பியால் சுரக்கப்படும்.

தொழில்கள் :
1. குழந்தை பிறக்கும் போது பூப்பென்பு ஒட்டைத் தளர்த்தி குழந்தை 
    இலகுவாக பிறப்பதற்கு உதவுதல்.
2. ஆண்களில் விந்தின்   அசைவை   இலகுவாக்குதல்.

இலங்ககான் சிறுதீவுகள்

சதையியின் புறஞ்சுரக்கும் கூறுகளுக்கிடையே எழுந்தமானமாக பரவிக் காணப்படும் கோளவடிவான புடகங்கள் / சிறிய கலத்திணிவுகள்.
அதிகளவு குருதிமயிர்த்துளைக் குழாய்களைக் கொண்டது.
ஒவ்வொரு புடகமும் 3 வகையான கலங்களைக் கொண்டிருக்கும் அவையாவன,
1. α Cell…………… Glucagon எனும் ஓமோனைச் சுரக்கும்.
2. β Cell………… Insulin எனும் ஓமோனைச் சுரக்கும்.
3. γ Cell………… Somatostatin எனும் ஓமோனைச் சுரக்கும்.
Insulin  இன் தொழில்கள்
1. குருதியில் உள்ள மேலதிக Glucose ஐ Glycogen ஆக மாற்றுதல்.
2. கலங்களால் Glucose உள்ளெடுக்கப்படும் வீதம், பயன்படுத்தப்படும் வீதம் 
    ஆகியவற்றை அதிகரிக்கச் செய்தல்.
3. Glucose ஐ கொழுப்பமிலம், கொழுப்புப்படிவுகளாக மாற்றுவதைக் தூண்டுதல்.
4. கலங்களிலுள்ள Amino Acid உள்ளெடுக்கப்படுதலை உள்ளெடுக்கச் செய்தல்.
5. புரதத் தொகுப்பு நிகழும் வீதத்தை அதிகரிக்கச் செய்தல் / DNA உற்பத்தியை 
    தூண்டுதல்.

Insulin மிகையாகச் சுரக்கப்பட்டால்.
1. குருதியில் Glucose இன் செறிவு சாதாரண அளவை விட குறைவடையும் 
    இத்தன்மை குறைவெல்ல உண்மை எனப்படும்.
2. பசி ஏற்படும்.
3. வியர்க்கும்.
4. விரைவில் உணர்ச்சிவசப்படுவர்.
5. இரட்டைப் பார்வை ஏற்படும்.
6. தசைச் சுருக்கம் பாதிக்கப்படும்.
7. நரம்புக் கணத்தாக்கம் பாதிக்கப்படும்.

Insulin குறைவாகச் சுரக்கப்பட்டால்
1. குருதியில் Glucose செறிவு அதிகரிக்கும். இத்தன்மை அதிபரவெல்ல உண்மை 
    எனப்படும்.
2. குருதியில் Glucose இன் செறிவு குறித்த அளவை விட அதிகரிக்கும் போது 
   மேலதிக Glucose சிறுநீருடன் வெளியேற்றப்படும். இது வெல்லமுள்ள நீரிழிவு 
    / Diabities Mellitus எனப்படும்.
3. தசையிழையம் உடைக்கப்படும், உடல்நிறை குறைவடையும், களைப்பு 
    ஏற்படும்.
4. பார்வை, கேட்டல் குறைவடையும்.
5. காயங்கள் குணமடையமாட்டாது.

Glucagon இன் தொழில்கள்
1. குருதியில் Glucose மட்டம் குறித்த அளவை விடக்குறைவடையும் போது 
    ஈரலிலுள்ள Glycogen ஐ Glucoseஆகமாற்றும்.
2. புரதம், கொழும்பு ஆகியவற்றிலிருந்து Glucose இன் உருவாக்கத்தை 
    தூண்டுதல்.
3. Lactic Acid ஐ Glucose ஆக மாற்றுதல்.

1. Insulin மிகையாகச் சுரக்கப்பட்டால் ஏற்படும் விளைவு Glucagon குறைவாகச் 
    சுரக்கப்பட்டால் ஏற்படும் விளைவு.
2. Insulin குறைவாகச் சுரக்கப்பட்டால் ஏற்படும் விளைவு Glucagon மிகையாகச் 
   சுரக்கப்பட்டால் ஏற்படும் விளைவு.

அதிரீனல் மையவிழையம்.

மையத்தில் காணப்படும் பிரதேசம்.
புறத்தோற்படை உற்பத்திக்குரியது.
நரம்புத் திரட்டுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.
இதிலுள்ள கலங்கள் - Chromoffin கலங்கள் எனப்படும்.

பின்வரும் ஓமோன்களைச் சுரக்கும்
1. Addrenaline / Epinephrine   - அவசரகால ஓமோன்
2. Noraddrenaline / Norepinephrine - அவசரகால ஓமோன்
3. Doparmin - அவசரகால ஓமோன்

அவசரகால ஓமோன்களின் தொழில்கள்
01. சுவாச வீதத்தை அதிகரிக்கச் செய்யும்.
02. இதயதுடிப்பு வேகத்தை அதிகரிக்கச் செய்யும்.
03. சிறுநீர்பையின் சுருக்கத்தைத் தடுக்கும்.
04. சமிபாடு நிகழ்வதை நிரோதிக்கும்.
05. ஈரலில் கிளைக்கோசனிலிருந்து குளுக்கோசின் உருவாக்கத்தைக் 
     கூட்டுதல்.
06. Glucose + O2 -------> CO2+H2O+ATP எனும் தாக்கம் நிகழ்வதைக் கூட்டுதல்.
07. Glucose -------> Lactic Acid + ATP எனும் தாக்கம் நிகழ்வதைக் கூட்டுதல்.
08. நீண்ட என்புகள், வன்கூட்டுத்தசை, இதயம், மூளை ஆகியவற்றுடன் 
     தொடர்புடைய குருதிக் கலன்களை விரிவடையச் செய்தல்.
09. உட்தோலில் உள்ள குருதிக்கலன்களை சுருங்கச் செய்தல்.
10. அவசரம், பதட்டநிலையின்போது அதற்கேற்றவாறு உடலை மாற்றுதல்.
அவசரகால ஓமோன்களின் தொழில்கள் = பரிவு நரம்புத் தொகுதியின் தொழில்கள்.
அவசரகால ஓமோன்கள் Thyrosine எனும் அமினோவமிலத்திலிருந்து தொகுக்கப்படும்.

அதிரீனல் மேற்பட்டை

வெளிப்புறமானது.
இடைத்தோற்படை உற்பத்திக்குரியது.
அதிரீனல் சுரப்பியின் பெரும்பாகத்தை அமைக்கும்.
மூன்று வளையங்களில் அடுக்கப்பட்ட கலங்களைக் கொண்டுள்ளது.
உயிர்வாழ்வதற்கு அவசியமான பகுதி.
இதன் தொழிற்பாடு முன்கபச்சுரப்பியால் சுரக்கப்படும்.  ACTH ஆல் கட்டுப் படுத்தப்படும்.

பின்வரும் ஓமோன்களைச் சுரக்கும்.
i. Mineralo Corticoids - (உ+ம்) : Aldosterone.
ii. Gluco Corticoids - (உ+ம்) : Cortisol, Corti Costerone.
iii. Sex Corticoids  - (உ+ம்) : Androgens.
Mineralo Corticoidsஇன் தொழில்கள் 
1. சிறுநீரகத்தியின் சேய்மை மடிந்தகுழாயைத் தூண்டி Na+ மீள 
    அகத்துறுஞ்சலைத் தூண்டுதல்.
2. சிறுநீரகத்தியால் K+ அகத்துறுஞ்சப்படுவதைக் குறைத்தல்.
3. Na+, K+ ஆகியவற்றில் சமநிலையைப் பேணுதல்.
4. உமிழ்நீர், வியர்வை, சிறுநீர் ஆகியவற்றுடன் அதிகளவு 
    Na+ வெளியேறுவதைத் தடுத்தல்.
5. உடலில் பிரசாரண அமுக்கத்தை சீராக்கப் பேணுதல்.

Mineralo Corticoids  மிகையாக சுரக்கப்பட்டால்.
1. சிறுநீர் அகத்தியில் Na+ மீள அகத்துறுஞ்சப்படுதல் அதிகரிக்கும் எனவே
    அதிகளவு  Kகுருதியிலிருந்து வெளியேற்றப்படும்.
2. சிறுநீரகத்தியால் அதிகளவு நீர் மீளவகத்துறுஞ்சப்படும்.
3. இதயத்துடிப்பின் சந்தம் குறையும்.
4. குருதியமுக்கம் அதிகரிக்கும்.

Mineralo Corticoids குறைவாகச் சுரக்கப்பட்டால்.
1. சிறுநீகத்தியால் Na+, நீர் ஆகியவை மீளவத்துறுஞ்சப்படுதல் குறையும்.

Gluco Corticoids  இன் தொழில்கள்
தகைப்பு, மனவெழுச்சி, மிகையான குளிர் போன்ற தூண்டல்களால் சுரக்கப்படும்
காபோகைதரேற்றின் அனுசேபத்தைச் சீராக்குதல்.
புரத உடைப்பைத் தூண்டுதல்.
புரதத்திலிருந்து Clucose  உருவாதலைத் தூண்டுதல்.
கொழுப்பனுசேபத்தைத் தூண்டி குருதியில் கொழுப்பமிலத்தின் செறிவை அதிகரிக்கச் செய்தல்.
ஈரலில் Glycogen உருவாவதைத் தூண்டுதல்.
ஒவ்வாமையைக் குறைத்தல் / பிறபொருள் எதிரி உருவாவதைக் குறைத்தல்.
உடல் வீங்குவதைக் குறைத்தல்.
இலைசோசோமின் மென்சவ்வை உறுதியாகபேணுதல்.

Gluco Corticoids மிகையாகக் சுரக்கப்பட்டால்.
1. குருதியில் குளுக்கோசின் செறிவு அதிகரிக்கும்.
2. முகத்தில் அதிகளவு கொழுப்புபடிந்து முகம் சந்திரனின் வடிவத்திற்கு மாறும்     இது Cushing Diesease எனப்படும்.
3. உயர் குருதியமுக்கம் ஏற்படும்.
4. நிரிழிவு ஏற்படும்.
5. மயிர்கள் மிகவேகமாக வளரும்.

Gluco Corticoids குறைவாக சுரக்கப்பட்டால்.
1. தசைகள் பலமிழந்து அடிசன் நோய் (Addison Diesease) உருவாகும்.
2. தாழ் குருதியமுக்கம் ஏற்படும்.
3. தொற்று நோய்க்கான எதிர்புச்சக்தி குறையும்.
4. தோல் சோர்ந்து கறுப்பு நிறமாக மாறும் / மெலனினின் அளவு அதிகரிக்கும்.
5. மாதவிடாய் வட்டம் ஒழுங்கீனமாக நடைபெறும்.
6. மயிர்கள் விரைவாகக் கொட்டிவிடும்.
7. மனக் குழப்பம் ஏற்படும்.
Sex Corticoids தொழில்கள்.
Testesterone எனும் ஓமோன்களுக்கு ஒப்பானது.
1. இலிங்க அங்கங்களின் விருத்தியை தூண்டும்.
2. துணைப்பாலியல்புகளின் விருத்தியைத் தூண்டும்.
3. ஆண்களின் தசைகளில் புரதம் படிதலைத் தூண்டும்.

Sex Corticoids மிகையாக சுரக்கப்பட்டால்.
1. ஆண்களில் இலிங்க முன்முதிர்வு ஏற்படும்.
2. பெண்களில் ஆண்தன்மை உருவாகும் / பெண்கள் ஆண்களாக மாறுவர்.
3. இலிங்க அங்கம் நலிவடையும்.

Sex Corticoids குறைவாகச் சுரக்கப்பட்டால்,
1. உடல் பலமிழக்கும்.
2. சிறுநீரகங்கள் செயலிழக்கும்.