Wednesday, November 5, 2025

மகனீசியம் (Mg) பிரித்தெடுப்பு - டவ்(Dow) முறை

Mg அடங்கிய மூலப்பொருட்கள் தாவரங்களிலும், கடல் நீரிலும் காணப்படுகிறது.

கடல் நீரில் Na⁺இற்கு அடுத்தபடியாக Mg²⁺அடங்கியிருக்கும்.(0.13%)

NaCl உற்பத்தியில் மூன்றாவது பாத்தியில் காணப்படும் தாயத்திரவம் /பிற்றைன் இதற்கு மூலப்பொருளாக பயன்படும்.

பின்வரும் 4 படிமுறைகளைக் கொண்டது.

படிமுறை - 1 (CaO இன் தயாரிப்பு)

CaCO₃, டொலமைற்று ( CaCO₃, MgCO₃) என்பன வெப்பமாக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.

கிடைக்கும் CaO, CaCO₃ மாசாகக் காணப்படுவது ஓர் பிரதிகூலமாகும்.

படிமுறை - 2 (Mg(OH)₂ இன் உற்பத்தி)

முதலாம் படிமுறையில் உற்பத்தி செய்யப்பட்ட ஒட்சைட்டுக்கள் (CaO, MgO) பிற்றைன் கரைசலுடன் தாக்கமுறச் செய்யப்படும்.

Ca(OH)₂ இன் கரைதிறன் பெருக்கமானது (Ksp) Mg(OH)₂ இன் கரைதிறன் பெருக்கத்திலும்(Ksp) அதிகமாகையால் Mg(OH)₂ படியும். எனவே Ca(OH)₂ ஐ சேர்ப்பதன் மூலம் இன்னும் Mg(OH)₂ ஐ படிவடையச் செய்யலாம்.

படிமுறை - 3

Mg(OH)₂ இனை வடித்து வேறாக்கி செறிந்த HCl உடன் தாக்கமுறச் செய்து MgCl₂ உற்பத்தி செய்யப்படும்.

டொலமைற்று பயன்படுத்துகையில் அதில் காணப்படும் MgOஆனது நீரில் கரையாமல் Mg(OH)₂ உடன் சேர்ந்து காணப்படும்.

படிமுறை - 4

MgCl₂ இன் உலர் நிறையில் 16% நீர் உள்ளது. இதனால் MgCl₂ வெப்பமேற்றப்பட்டு அதிலடங்கியுள்ள நீர் ஆவியாக்கப்படும்.

MgCl₂.2H₂O ஐ உருக்கும் போது அதில் அடங்கியிருக்கும் நீரும் அகற்றப்படும்.


No comments:

Post a Comment