Thursday, November 6, 2025

எரிசோடா (NaOH) உற்பத்தி

தூய NaCl நீர்க்கரைசலை (பிரையின் கரைசலை) மின்பகுப்புச் செய்வதால் எரிசேடா (NaOH) உற்பத்தி செய்யப்படுகிறது.

மின்பகுப்பு மூலம் எரிசேடாவை உற்பத்தி செய்யும் கலங்கள் "காரகுளோரிக்கலம்" என அழைக்கப்படும்.

இது மூன்று வகைப்படும்.

1. இரசக் கலமுறை
2. பிரிமென்றகட்டுப் கலமுறை
3. மென்சவ்வுக் கலமுறை

ஆரம்ப காலத்தில் இரசக் கல முறையை அடிப்படையாகக் கொண்டே உற்பத்தி செய்யப்பட்டது. எனினும், சூழலுக்கு இரசம் விடுவிக்கப்படுவது இம்முறையின் பிரதிகூலமாகும்.

ஆனால், பிரிமென்றகட்டுக் கலமும் மென்சவ்வுக்கலமும் பெருமளவில் ஒன்றையொன்று ஒத்தன. ஆனால் மென்சவ்வுக்கலத்தில் பிரிமென்றகட்டுக்குப் பதிலாக அனோட்டையும் கதோட்டையும் வேறுபடுத்துவதற்காக Na⁺ அயன்கள் செல்லக்கூடிய மென்சவ்வு பயன்படுத்தப்படும்.

No comments:

Post a Comment