Tuesday, November 4, 2025

சல்பூரிக்கமிலம் உற்பத்தி செய்தல் (தொடுகை முறை)



மூலப்பொருட்கள் - கந்தகம் (S), கந்தக தாதுக்கள் (PbS, CuS, ZnS), வளி, நீர்

1. ஊக்கி - V₂O₅ (வனேடியம் ஐ ஒட்சைட்டு)
2. தூண்டி - K₂SO₄
3. அமுக்கம் - (1 atm)
4. வெப்பநிலை - (450 ℃)

மேற்படி நிபந்தனைகள் பிரயோகிக்கப்படுகையிலே 96% - 98% விளைவு தோன்றுகிறது.

உயர் வெப்பநிலையில் உலோக அரண்கள் அரிப்பிற்குள்ளாகும்.

உயர் அமுக்கத்தை ஏற்படுத்துவதற்கான செலவு அதிகமானதாகையால்  1 atm அமுக்கம் பொதுமானது.

தொகுதியை குளிர்த்தும் போது நீராவியை பயன்படுத்தி மின் பிறப்பிக்க பயன்படும்.

SO₃ ஐ நீரில் கரைக்காமல் செறிந்த H₂SO₄ அமிலத்தில் கரைப்பதற்குக் காரணம் நீரில் கரைத்தால் அடர்வு கூடிய  மூடுபனி உருவாகும்.

SO₃ ஆனது செறிந்த H₂SO₄ இல் கரைக்கப்படுவதால் H₂S₂O₇(ஓலியம்) உருவாக்கப்படும்.

H₂SO₄ இன் பயன்கள்
1. பொசுபேற்று உரங்களின் பரும்படி தயாரிப்பு
     Ca₃(PO₄)₂ இலிருந்து Super Phosphate ஐ தயாரித்து குறுகிய காலத்தாவரங்களுக்கு         உரமாக பயன்படுத்த முடியும்.
2. அரசநீர் தயாரிப்பு
3. நீரகற்றும் கருவியாகப் பயன்படும்.
4. வாயுக்களை உலர்த்துதல்
5. பற்றரி அமிலத் தயாரிப்பு
6. சாய வகை பொருள்கள், வெடிபொருள்கள் மற்றும் ஒளடங்கள் உற்பத்தி
7. அமோனியம் சல்பேற்று ((NH₄)₂SO₄) பசளை உற்பத்தி
8. ரெயோன் உட்பட செயற்கை நார் மற்றும் பிளாத்திக்கு உற்பத்தி

No comments:

Post a Comment