• குருதியில் செங்குழியங்கள், வெண்குழியங்கள் தவிர குருதியில் வேறு
வகையான கலங்களும் காணப்படுகின்றன. இவை குருதிச்சிறுதட்டுக்கள்
எனப்படும்.
• கருவற்ற, ஒழுங்கற்ற வடிவமுள்ள கலங்கள்.
• 1ml3 குருதியில் 2,50,000 குருதிச்சிறுதட்டுக்கள் காணப்படும்.
• செவ்வென்பு மச்சையில் உருவாக்கப்படும்.
குருதிச்சிறுதட்டுக்களின் தொழில்கள்
1. உடலில் காயமேற்பட்டால் அதிலிருந்து குருதி வெளியேறும். இதன்போது
ஏற்படும் தகைப்பின் காரணமாக குருதிச்சிறுதட்டின் சுவர் உடைந்து அதன்
காரணமாக குருதி உறைவதனால் மேலும் குருதி வெளியேறுவது
தடுக்கப்படும். மேலும் குருதி உறைதலில் வேறு பல பதார்த்தங்களும்
பங்களிப்புச் செய்கின்றன.
No comments:
Post a Comment