மிருகங்களிலேயே, நாய்களை மட்டுமே மனிதனின் உண்மையான நண்பன் என்று கூறுவதுண்டு.
இந்த விஷயத்தில் நாய் பூனையிலிருந்து வேறுபடுகின்றது. நாய்கள் ஓநாய்களின் இனத்தைச்
சேர்ந்தவை. ஓநாய்கள் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து வசிக்கும், ஒவ்வொரு
கூட்டத்திற்கும் ஒரு தலைவன் உண்டு. மற்ற ஓநாய்கள் தலைவனின் கட்டளைக்கு அடிபணிந்து
நடக்கும்.
அந்த இனத்தைச் சேர்ந்த நாய்களும் தங்களை வளர்க்கும் மனிதனைத் தங்கள் தலைவனாக
ஏற்றுக்கொண்டு அவனிடம் விசுவாசமாக நடந்து கொள்கின்றன. ஆனால் தனது
இருப்பிடத்திற்குக் கொடுக்கும் மதிப்பைக்கூட தன் எஜமானருக்குப் பூனை
தருவதில்லை.
No comments:
Post a Comment