Tuesday, June 9, 2015

குருதி இனங்கள்(Blood Group)

மனிதனின் குருதியில் செங்குருதிக்கலங்களில் விசேடமான புரதங்கள், உடலெதிரியாக்கிகள் ஆகியன காணப்படுவதால் காணப்படுவதனால் குருதி  A,B,AB,O எனும் நான்கு இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
குருதியினங்களை நான்கு வகையாகப் பிரிக்கமுடியும் என கார்ன்ஸ் லான்ஸ்ரைனர் எனும் வைத்தியர் முதன் முதலில் கண்டு பிடித்தார்.
குருதிக் குறுக்குப்பாய்ச்சல்

இரத்த தானத்தின்போது சேகரிக்கப்படும் குருதி ஆனது குறிக்கப்பட்ட நிபந்தனைகளில் இரத்தவங்கிகளில் சேகரிக்கப்பட்டுக் காணப்படுகின்றது.

ஓரு மனிதருக்கு குருதி தேவைப்படும் சந்தர்ப்பங்கள்
1. விபத்தின் காரணமாக குருதிப் பெருக்கு ஏற்பட்ட ஒருவருக்கு
2. அறுவை சிகிச்சையின் போது குருதிப் பெருக்கு ஏற்பட்ட ஒருவருக்கு
3. நோய்கள் காரணமாக குருதிப்பற்றாக்குறை ஏற்பட்ட ஒருவருக்கு
    செயற்கை முறையில் உடலுக்குக் குருதியை வழங்குதலே குருதிக்
    குறுக்குப்பாய்ச்சல் எனப்படும்.

குருதி வாங்கி
குருதி குறுக்குப்பாய்ச்சலின் போது குருதியைப் பெறுபவர் குருதி வாங்கி எனப்படுவார்.

குருதி வழங்கி
குருதியை அளிப்பவர் குருதி வழங்கி எனப்படுவார்.

மேலும் குருதி வழங்கியினதும் குருதி வாங்கியினதும் குருதிமாதிரிகள் சோதிக்கப்பட்டு அவை ஒன்றுடன் ஒன்று பொருந்துமாயின் மட்டுமே கருதி வழங்கப்படமுடியும்.
அவ்வாறு இருவரினதும் குருதி மாதிரிகள் பொருந்தாத நிலையில் குருதி வழங்கப்படுமாயின் குருதியைப் பெறுபவரின் உடலினுள் குருதி உறைந்து அவர் மரணத்தைத் தழுவநேரிடும்.

பொதுவாங்கி
எல்லா இனக் குருதிகளையும் பெறக்கூடிய குருதி இனத்தைக் கொண்டவர் பொதுவாங்கி எனப்படுவார்.
Eg:- AB இனக் குருதியைக் கொண்டவர்கள்

பொதுவழங்கி
எவ்வினக் குருதியைக் கொண்டவர்கட்கும் குருதியை வழங்கக்கூடிய குருதி இனத்தைக் கொண்டவர் பொதுவழங்கி எனப்படுவார்.
Eg:- O இனக் குருதியைக் கொண்டவர்கள்

No comments:

Post a Comment