இவை சேதனச் சேர்வைகளால் ஆக்கப்பட்டவை.
பின்வருமாறு வகைப்படுத்தப்படும்.
1. நீரில் கரையும் விற்றமின்கள் - B, C
இவை அதிகளவில் உடலினுள் உள்ளெடுக்கப்படும் பட்சத்தில் மேலதிகமானவை சிறுநீரினூடாக வெளியேற்றப்படும். எனவே உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படமாட்டாது.
2. கொழுப்பில் கரையும் விற்றமின்கள் - A, D, E, K
இவை அதிகளவில் உடலினுள் உள்ளெடுக்கப்படும் பட்சத்தில் மேலதிகமானவை உடலினுள் சேர்க்கையடைந்து உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
விற்றமின்கள் அடங்கியுள்ள உணவுகள்
1. விற்றமின் - A - மஞ்சள் நிறமான காய்கறி மற்றும் பழங்கள், பால், முட்டை
2. விற்றமின் - B - ஈஸ்ட், முழு தானியங்கள், ஈரல், பயறுகள்
3. விற்றமின் - C - புளிப்புச் சுவையுடைய பழங்கள்
4. விற்றமின் - D - சூரிய ஒளி, வெண்ணெய், மாஜரின்
5. விற்றமின் - E - முளைவரும் கோதுமை, கீரை வகைகள், பால்
6. விற்றமின் - K - முடடைக்கோஸ், பச்சை பட்டாணி, காய்கறிகள்
2. விற்றமின் - B - ஈஸ்ட், முழு தானியங்கள், ஈரல், பயறுகள்
3. விற்றமின் - C - புளிப்புச் சுவையுடைய பழங்கள்
4. விற்றமின் - D - சூரிய ஒளி, வெண்ணெய், மாஜரின்
5. விற்றமின் - E - முளைவரும் கோதுமை, கீரை வகைகள், பால்
6. விற்றமின் - K - முடடைக்கோஸ், பச்சை பட்டாணி, காய்கறிகள்
விற்றமின்களும் அவற்றால் ஏற்படும் குறைபாடுகளும்
விற்றமின்கள் நாம் அன்றாடம் உள்ளெடுக்கும் உணவில் குறைவடைகின்ற போது பல்வேறு குறைபாட்டு அறிகுறிகள் எமது உடலில் ஏற்படுகின்றன.
1. விற்றமின் - A - மாலைக்கண், பீற்றோப்புள்ளி
2. விற்றமின் - B - பெரிபெரி நோய்/ பெலகிரா நோய், குருதிச்சோகை,
கடைவாய் அவிதல்
3. விற்றமின் - C - ஸ்கேவி நோய், முரசு கரைதல், நோய் எதிர்ப்பு சக்தி
குறைவடைதல்
4. விற்றமின் - D - என்புருக்கி நோய், ஒட்சியோபோரோசிஸ்
5. விற்றமின் - E - மலட்டுத்தன்மை
6. விற்றமின் - K - குருதி உறையா நோய்
• விற்றமின் B ஆனது சிக்கலான குடுப்ப விற்றமின் ஆகும்.
• இதில் B1, B2, B3, B5, B6, B7, B9, B12என்பன உள்ளடங்குகின்றன.
• பெருங்குடலில் வாழும் E.Coli Bacteria கள் விற்றமின் B இனைத்
தொகுக்கும் ஆற்றல் கொண்டவை. எனினும்
நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் உடலினுள்
உள்ளெடுக்கப்படுகின்றபோது இவ் Bacteria கள்
அழிக்கப்படுகின்றன.
• வயதானவர்களின் உணவுக்கால்வாயத் தொகுதி விற்றமின் B
இனை அகத்துறுஞ்சும் ஆற்றல் அற்றவை எனவே இவர்களுக்கு
ஊசி மூலமாகவே இவ்விற்றமின் உடலினுள் செலுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment