இவை பொதுவாக பிரியுமாற்றலை இழந்துள்ளது. இருப்பினும் சிலவேளைகளில் மீண்டும் பிரியுமாற்றலைப் பெறும்.
அங்கிகளின் வளர்ச்சியின் போது நிலையிழையங்கள் தோற்றுவிக்கப்படும். (தோற்றுவிக்கப்படும்)
ஒரு தனிக்கலத்தில் ஆரம்பித்து நடைபெறும் பல்கல அங்கிகளின் வளர்ச்சி மூன்று அவத்தைகளாகப் பிரிக்கப்படும்.
1. கலப்பிரிவு
2. கலநீட்சி
3. கலவியத்தம்
கலப்பிரிவு
இழையுருப்பிரிவினதும் கலப்பிரிவினதும் (குழியவுருப்பிரிவு) விளைவாக கல எண்ணிக்கையில் ஏற்படும் அதிகரிப்பு கலப்பிரிவு எனப்படும்.
கலநீட்சி/ கலவிரிவு
பதார்த்தங்களின் தொகுப்பின் விளைவாக ஏற்படும் மீளமுடியாத கலப்பருமன் அதிகரிப்பு கலநீட்சி/ கலவிரிவு எனப்படும்.
கலவியத்தம்
ஒரு குறித்த தொழிலைச் செய்வதற்காக கலங்களோ அல்லது இழையங்களோ சிறத்தலடையும் செயன்முறை கலவியத்தம் எனப்படும்.
அங்கியின் வளர்ச்சியும் வியத்தமும் கலங்களில் DNA இல் காணப்படும் பிறப்புரிமைச் செய்தியினால் கட்டுப்படுத்தப்படும்.
No comments:
Post a Comment