Tuesday, June 9, 2015

நிர்ப்பீடனம்(Immunity)

உடலினுள் புகும் நுண்ணங்கிகளை அகற்றும் அல்லது பெருகும் செயல் முறையைத் தடுக்கம் ஆற்றலே நிர்ப்பீடனம் எனப்படும்.

நிர்ப்பீடனம் காரணமாக உடலானது நோய்கள், நுண்ணங்கிகளின் தொற்றுதல், பெருக்கம் போன்றவற்றிலிருந்து தடுக்கப்படும்.

இது இருவகைப்படும்.

1. சிறப்பான நிர்ப்பீடனம் (Specific Immunity)
2. பொதுவான நிர்ப்பீடனம் (Non-Specific Immunity)
3. சிறப்பான நிர்ப்பீடனம் (Specific Immunity)

இது குறுகிய காலத்துக்கு அல்லது நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கலாம்.
உடலில் இந்நீர்ப்பீடனம் இரு வழிகளில் ஏற்படும்.

1. குறிப்பிட்ட நோயொன்று ஒரு தடவை ஏற்படுவதனால் ஏற்படும்
    நீர்ப்பீடனம்
Eg  :-  கொப்புளிப்பான், சின்னமுத்து, இது இயற்கையாகப் பெற்ற உயிர்ப்பான
          நிர்ப்பீடனம் ஆகும்.

2. குறிப்பிட்ட ஒரு நோய் வராது தவிர்ப்பதற்காக செயற்கையாக
    ஏற்படுத்தப்பட்ட நிர்ப்பீடனம்.
Eg  :- பிறப்பின்போது வழங்கப்படும் முக்கூட்டு வக்சின், போலியோ தடுப்பு
         மருந்து போன்றவை செயற்கையாகப் பெற்ற உயிர்ப்பான நிர்ப்பீடனம்
         ஆகும்.தாயின் கருப்பையில் உள்ளபோது தாயிலிருந்து பிள்ளைகளுக்கு
         பிறபொருள் எதிரிகள் கிடைக்கும். எனினும் குழந்தை பிறந்து முதற் சில
         நாட்களுக்கு வழங்கப்படும் தாய்ப்பாலிலுள்ள (சீம்பால்) அதிக
         பிறபொருள் எதிரிகள் கொண்டது. இது இயற்கையாகப் பெற்ற மந்தமான
         நிர்ப்பீடனம் எனப்படும்.

பொதுவான நிர்ப்பீடனம் (Non-Specific Immunity)
இது சுகதேகி மனிதர்களில் பொதுவான பாதுகாப்புப் பொறிமுறையாகும்.
இது பொதுவாக எல்லா நோய் நுண்ணங்கிகளுக்கும் எதிராகத் தொழிற்படும்.
இது பலவழிகளில் கிடைக்கிறது.

1. தோல் மற்றும் சீதமென்சவ்வு ஆகியன மூலம்.
2. உடற்பாய்மத்தில் அடங்கியுள்ள பிறபொருள் எதிரிகள் மூலம்.
3. தின்குழியச் செயல் மூலம்.

தோலிற்கு வெளியே கொம்புருப்படை காணப்படுவதனால் தோலினூடாக
   நுண்ணங்கிகள் உட்செல்லாது. தோலில் உருவாகும் வியர்வை,
   நெய்ச்சுரப்பிகள் போன்றன. நுண்ணுயிர்க் கொல்லிப் பதார்த்தங்களைக்
   கொண்டிருப்பதால் தோலின் மீது எற்படும் நோய்விளைவிக்கும்
   நுண்ணங்கிகளின் வளர்ச்சியைத் தடுக்கும்.

சுவாசப்பையிலுள்ள சீதமென்சவ்வு மூலமாக சீதம் சுரக்கப்படும்.
   சுவாசப்பாதையினூடாக உற்புகும் நுண்ணங்கிகள் சீதத்துடன்
   வெளியேற்றப்படும். உணவுக்கால்வாயினுள் செல்லும் நுண்ணங்கிகள்
   உணவுக்கால்வாயிலுள்ள ஜதரோக்குளோரிக்மிலத்தால் அழிக்கப்படும்.

உமிழ்நீர், கண்ணீர் ஆகியவற்றில் அடங்கியுள்ள இலைசோசைம் எனும்
   நொதியம் பற்றீரியாவின் கலச்சுவரை அழிக்கும். உடலிலுள்ள சில
   இரசாயனப் பொருள்கள், நோய்க்காரணி நுண்ணங்கிகளுக்கு அவசியமான
   இரும்புடன் சேர்வதால் அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான இரும்பை
   கிடைக்காது செய்து அவற்றைக் கட்டுப்படுத்தும்.

ஏதாவது நுண்ணங்கிகள் குருதியினுள் உட்சென்றால் நிணநீர்த்
   தொகுதியிலுள்ள பல்வேறு கலங்களால் இவை தின்குழியச் செயல் மூலம்  
   அழிக்கப்படும்.

No comments:

Post a Comment