Wednesday, October 21, 2020

நியமக்கரைசல்கள்

செறிவு திட்டமாக அறியப்பட்ட கரைசல்கள் நியமக் கரைசல்கள் எனப்படும்.

நியமக்கரைசல்களைத் தயாரிக்கப் பயன்படும் பதார்த்தம் கொண்டிருக்க வேண்டிய சிறப்பியல்புகள்
1. நீர்மயமடையக் கூடாது
Eg:- NaOH நீர்மயமடையக் கூடியது
2. ஆவிப்பறப்பு அற்றாத இருத்தல் வேண்டும்.
Eg:- HCl  ஆவிப்பறப்பு உடையது.
3. ஒளிக்குப் பிரியையடையாததாக இருத்தல் வேண்டும்.
Eg:- AgNO3 ஒளிக்கு பிரிகையடைக்கூடியது.
4. வளியுடன் பிரிகையடையாததாக இருத்தல் வேண்டும்.

நியமக் கரைசல்களைத் தயாரித்தல்

குறித்த கனவளவுடைய நியமக்குடுவைகளைப் பயன்படுத்தி குறித்த செறிவுடைய நியமக் கரைசல்கள் தயாரிக்கப்படும்.
Eg:- 0.1M செறிவுடைய Na2CO3 இன் 250cm3 நியமக்கரைசலைத் தயாரித்தல்
0.1M செறிவுடைய Na2CO3 இன் 250cm3 நியமக்கரைசலைத் தயாரிக்கத் தேவையான Na2CO3 இன் நிறை பின்வருமாறு கணிக்கப்படும்.
2.65g Na2CO3 ஐ தகுந்த முறையைப் பயன்படுத்தி மணிக்கூட்டுக் கண்ணாடி ஒன்றினுள் எடுத்து புனல் ஒன்றின் உதவியுடன்  250cm3 னவளவுடைய நியமிப்புக்குடுவையினுள், கழுவற்போத்தல் ஒன்றின் உதவியுடன் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று உட்செலுத்தப்படும்.
கழுவற்போத்தில் இருந்து நீரைச்செலுத்தி மணிக்கூட்டுக் கண்ணாடியிலும், புனலிலும் உள்ள Na2CO3 கழுவப்பட்டு நியமிப்புக்குடுவையினுள் சேர்க்கப் படும்.
நியமிப்புக்குடுவையினுள் குறித்த கனவளவு காய்ச்சி வடித்த நீரைச்சேர்த்து Na2CO3 முற்றாகக் கரைக்கப்படும்.
பின்னர் நியமக்குடுவையினுள் குறித்த கனவளவு காய்ச்சி வடித்த நீரைச்சேர்த்து 0.1M செறிவுடைய Na2CO3 இன் 250cm3 நியமக் கரைசலைப் பெறலாம்.
நியமக்குடுவையினைத் கண்ணாடித் தக்கையினால் இறுக மூடி ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தலைகீழாக கவிழப்பதன் மூலம் ஏகவீனக் கரைசலைப் பெறமுடியும்.
Note:- 
1. நீர் மேற்பரப்பின் பிறைவடிவத்தின் கீழ்ப்பரப்பு அளவு கோட்டில் இருத்தல்வேண்டும்.
2. ஆய்வுசாலையில் திரவநிலையில் காணப்படும் பதார்த்தங்களின் குறித்த கனவளவு அளந்தெடுக்கப்பட்டு நியமக்கரைசல்கள் தயாரிக்கப்படும்.

நியமிக்கப்பட்ட கரைசல்கள்
நியமக்கரைசல்களைப் பயன்படுத்தி செறிவு தெரியாத கரைசலின் செறிவு அறியப்படும். இவ்வாறு செறிவு அறியப்பட்ட கரைசல்கள் நியமிக்கப்பட்ட கரைசல்கள் எனப்படும்.

No comments:

Post a Comment