Wednesday, October 21, 2020

பீசமானம்

சமப்படுத்தப்பட்ட சமன்பாட்டிற்கு அமைவாக நடைபெறும் இரசாயனத் தாக்கத்தில் பங்குபற்றும் தாக்கிகளுக்கிடையிலான எளிய முழுவெண் விகிதம் பீசமானம் எனப்படும்.

பீசமானத்தைத் துணிவதற்கான பரிசோதனைகள்

தொடர்மாறல் முறைகள்
இது மூன்று வகைப்படும்.
1. வீழ்படிவுமாற்றமுறை
2. வெப்பமாற்றமுறை
3. நிறமாற்றமுறை

நியமிப்பு முறைகள்(இதுவும் ஒரு விசேடமான தொடர்மாறல் முறையாகும்)
இது மூன்று வகைப்படும்.
1. அமிலகார நியமிப்பு
2. ஒட்சியேற்றத் தாழ்த்தல் நியமிப்பு
3. அயடமான நியமிப்பு

தொடர்மாறல் முறைகள்
தாக்கிகளை வெவ்வேறு மூல் எண்ணிக்கைகளில் தாக்கவிடும்போது உச்சவிளைவு கிடைக்கும் நிலையில் தாக்கமடையும் தாக்கிகளின் மூல் எண்ணிக்கைகளுக் கிடையிலான விகிதம் அத்தாக்கத்தின் பீசமானம் எனப்படும்.
தாக்கிகள் சமசெறிவில் பயன்படுத்தப்படும்போது உச்சவிளைவு நிலையில் தாக்கமடையும் தாக்கிகளின் கனவளவு விகிதமே பீசமான விகிதமாகக் கொள்ளப்படும்.

No comments:

Post a Comment