Wednesday, October 21, 2020

வீழ்படிவுமாற்றமுறை

இரசாயனத் தாக்கங்களின் போது வீழ்படிவை உருவாக்கும் தாக்கங்களுக்கே இம்முறை பொருத்தமானதாகும். 

இக்கரைசல்கள் ஒரே மாதிரியான ஒரே விட்டமுள்ள சுத்தமான உலர்ந்த பரிசோதனைக் குழாய்களில் கீழே காட்டியவாறு மொத்தக்கனவளவுகள் சமனாக இருக்குமாறு கலக்கப்படும்.
உண்டாகும் வீழ்படிவுகள் அடையவிடப்பட்டு வீழ்படிவின் உயரங்கள் mm இல் அளவிடப்படும்.
பின்னர் வீழ்படிவின் உயரங்களை கரைசலின் கனவளவிற்கு எதிராகக் குறித்து பின்வருமாறு வரைபு வரையப்படும்.
வரைபிலிருந்து உச்ச வீழ்படிவு பெறப்படும் நிலையில் கரைசல்களின் கனவளவு விகிதங்கள் அளவிடப்படும். ஆனால் இங்கு சம செறிவுடைய கரைசல்கள் தாக்கிகளாகப் பயன்படுத்தப்படுவதனால், கனவளவு விகிதமே மூல் விகிதத்திற்குச் சமனெனக் கொள்ளப்பட்டு பீசமான விகிதம் துணியப்படும்.   
Note:-  
1. மேற்படி பரிசோதனையில் குழாயில் காணப்படும் மொத்தக் கனவளவு மாறிலியாகப் பேணப்படவேண்டிய அவசியமில்லை. எனெனில் தாக்கிகளின்   கனவளவு உயரம் ஒரு போதும் வீழ்படிவின் உயரத்தைப் பாதிக்கமாட்டாது. 
2. தொங்கல் நிலையில் பெறப்படும் வீழ்படிவுகளுக்கு வீழ்படிவின் 
உயரங்களை அளந்து பீசமானத்தைத் துணியும் முறை திருத்தமானதல்ல. எனவே வீழ்படிவை வடித்து உலர்த்தி வீழ்படிவின் உலர்நிறை பெறப்பட்டு வீழ்படிவின் உலர்நிறையை தாக்கிகளின் கனவளவுக்கு எதிராகக் குறித்து  வரைபு வரைந்து பீசமானம் துணியப்படும்.
3. உருவாகும் வீழ்படிவுகள் மேலதிக தாக்கிகளில் கரையுமாயின் அவற்றை  வீழ்படிவு மாற்றமுறையில் பயன்படுத்தமுடியாது.
4. ஒன்றுக்கு மேற்பட்ட வீழ்படிவுகளை உருவாக்கும் தாக்கங்களையும் வீழ்படிவுமாற்ற முறைக்குப் பயன்படுத்தமுடியும். எனவே இங்கு 
ஒன்றுக்குமேற்பட்ட வீழ்படிவின் உயரங்கள் தாக்கிகளின் கனவளவுகளுக்கு எதிராக குறித்து வரைபு வரையப்பட்டு பீசமானம் துணியப்படும்.
5. கரைசல்களின் கனவளவுகளைத் திருத்தமாக அளவிடுவதற்கு அளவி  பயன்படுத்தப்படும்.
6. வீழ்படிவின் உயரம் அளவிடப்படும் சூழலின் வெப்பநிலை மாறாது 
   பேணப்படல் வேண்டும். எனவே குளிரூட்டப்பட்ட ஆய்வுகூடச் சூழல் 
   பேணப்படல் வேண்டும். 
7. பரிசோதனைக்காகப் பயன்படுத்தப்படும் கரைசல்களின் செறிவுகள் மிகத்திருத்தமாக துணியப்படல் வேண்டும். எனவே பரிசோதனைக்கு முன்னதாக இவற்றின் செறிவுகள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

No comments:

Post a Comment