Monday, May 7, 2018

நியமத்தோன்றல் வெப்பம் (∆H°f)(formation) ∆H = (-) / (+)

நியம நிபந்தனையில் ஒரு மூல் பதார்த்தம் அதன் ஆக்கக்கூற்று மூலகங்களிலிருந்து தோற்றுவிக்கப்படும் போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றமாகும்.

இது புறவெப்பத் தாக்கமாகவோ அல்லது அகவெப்பத் தாக்கமானதாகவோ அமையலாம்.
Note :- 
1. நியமத் தோன்றல் வெப்பவுள்ளுறைப் பெறுமானங்கள்  
    பெரும்பாலும் வெளிவிடப்படும் வெப்பவுள்ளுறை ஆகும்.  ∆H = (-)

2. பொதுவாக அயன்சேர்வைகளின் நியமத் தோன்றல் 
    வெப்பவுள்ளுறைப் பெறுமானங்கள் வெளிவிடப்படும்  
    வெப்பவுள்ளுறை ஆகும். ∆H = (-)

3. சில பங்கீட்டுவலுச் சேர்வைகளுக்கு நியமத் தோன்றல் 
    வெப்பவுள்ளுறைப் பெறுமானங்கள் அகவெப்பத்துக்குரிய 
    தாக்கமாகும்.
    Eg:-  C2H4, C3H8, C2H6, C6H5CH3, NO2, NO, HI
    C2 ஐ விட அதிகமான ஓதரோக்காபன்களுக்கு ∆H = (+) ஆகும்.

4. ஒரே வெப்பநிலையில் சேர்வை ஒன்றின் தோன்றல் வெப்ப 
    உள்ளுறை அச்சேர்வையின் வெப்பவுள்ளுறைக்கு சமனாகும்.

5. நியம நிபந்தனையில் சுயாதீன மூலகங்களின் வெப்பவுள்ளுறைப் 
    பெறுமானங்கள் அல்லது நியமத்தோன்றல் வெப்பவுள்ளுறைப் 
    பெறுமானங்கள் பூச்சியமாகக் கருதப்படும்.

6. சேர்வையின் தோன்றல் வெப்பநிலையின் உறுதியுடன் 
    அச்சேர்வையின் உறுதித்தன்மையும் வேறுபடுகின்றது. அதாவது 
    ஒரு சேர்வை தோன்றும் போது வெளியேற்றப்படும் சக்தி 
    அதிகரித்தால் அச்சேர்வையின் உறுதித்தன்மை அதிகரிக்கும்.
    ∆H = (-) எனின் உறுதித்தன்மை கூடியது.
    ∆H = (+) எனின் உறுதித்தன்மை குறைந்தது.

No comments:

Post a Comment