Monday, May 7, 2018

தாக்கவெப்பம் அல்லது தாக்கவெப்பவுள்ளுறை மாற்றம்

ஒரு இரசாயனத் தாக்கத்தின்போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றமாகும்.

இதன் அலகு KJ ஆகும்.

நியம மூலர் தாக்க வெப்பம் (∆H°)
நியம நிபந்தனையில் ஒரு மூல் பதார்த்தம் முற்றாகத் தாக்கமடையும் போது ஏற்படும் வெப்பவுள்ளுறை மாற்றமாகும்.
இதன் அலகு KJmol-1 ஆகும்.

தாக்கங்கள் நடைபெறும் விதத்தின் அடிப்படையில் தாக்க வெப்பவுள்ளுறை மாற்றங்கள் வௌ;வேறு பெயர்களால் அழைக்கப்படும்.
Eg:- 1.  நியமத் தோன்றல் வெப்பம்
    2. நியமத் தகன வெப்பம்
        3. நியமப் பிணைப்புச் சக்தி
  4. நியம நடுநிலையாக்கல் வெப்பம்

வெப்ப இரசாயனத் தாக்கத்தை எழுதும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்

1. தாக்கிகளினதும், விளைவுகளினதும் பௌதீகநிலை குறிக்கப்படல் வேண்டும்.
     (s) - solid
    (l) - liquid
    (g) - gas
    (aq) - aqueous
    (cry) - crystol
 2. மூலகங்களின் பிறதிருப்ப வடிவங்கள் குறித்துக் காட்டப்படல் 
     வேண்டும்.
     C(பென்சில் கரி)  or C(கிரபைட்டு)  or C(காரியம்)  
    C(வைரம்)   
3. தாக்கங்கள் சமப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
4. வெப்பவுள்ளறை மாற்றங்கள் குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

தாக்க வெப்பம் தங்கியுள்ள காரணிகள்
தாக்கவெப்பம் பின்வரும் நான்கு காரணிகளில் தங்கியுள்ளது.
   1.  தாக்கிகளினதும்ää விளைவுகளினதும் பௌதீக நிலை
   2. பிற திருப்ப வடிவங்கள்
   3. வெப்பநிலை
   4. அமுக்கம்

இலாவோசியினதும், இலாப்பிலாசினதும் கொள்கை
ஒரு தாக்கம் முன்நோக்கி நடைபெறும்போது உறிஞ்சப்படும் வெப்பம் அத்தாக்கம் பின்நோக்கி நடைபெறும் போது வெளிவிடப்படுகின்றது.

No comments:

Post a Comment