Monday, May 7, 2018

வெப்ப இரசாயனவியல்(Thermo Chemistry)

இரசாயனத் தாக்கங்களில் ஏற்படும் தாக்கத்தின் அளவை நேரடியாக அளவிட முடியாது. எனவே இத்தாக்கங்களின் போது வெளிவிடப்படும் வெப்பசக்தியை அளவிடுவதன் மூலம் இத்தாக்கங்களின் அளவைத் துணியமுடியும்.

உள்ளீட்டுச்சக்தி or அகச்சக்தி (Internal Energy)
அணு அல்லது மூலக்கூறுகளின் சொந்தமான மொத்த சக்தியாகும்.

இதன் உண்மைப் பெறுமானத்தை அளவிடமுடியாது. என்பதனால் வெப்ப இரசாயனத்தில் வெப்பவுள்ளுறை எனும் பதம் இதற்குப் பதிலாகப் பயன் படுத்தப்படுகின்றது.

சுயாதீன மூலகங்களின் அகச்சக்தி நியம நிபந்தனையில் பூச்சியமாகக் கருதப்படல் வேண்டும். ஆனால் சேர்வைகள் சுயாதீனமாக இராமல் பிணைப்புக்களாக இருப்பதால் அவற்றின் அகச்சக்திப் பெறுமானங்கள் பூச்சியமாகக் கருதப்படமாட்டது.

Note :- 
வெப்ப இரசாயனத்தில் நியம நிபந்தனை எனப்படுவது 25°c (273K) வெப்பநிலையும் 1 atm  அமுக்கமுமாகும்.



No comments:

Post a Comment