ஒரு தாக்கத்தின் ஆரம்ப, இறுதி நிலைகள் மாறாதிருக்கும் போது அத்தாக்கத்துடன் தொடர்புடைய வெப்பவுள்ளுறை மாற்றமானது படிகளின் எண்ணிக்கையிலோ, தாக்கப் பாதையிலோ தங்கியிருக்காது.
Eg:- CO2(g) பின்வரும் இருவழிகளில் உருவாக்கப்படுகின்றது.
Eg:- பென்சில் கரியிலிருந்து CO2(g) பின்வரும் இருவழிகளில்
உருவாக்கப்படுகின்றது.
Hess இன் விதிப்படி,
∆H =∆H1 + ∆H2 ஆகும்.
Hess இன் விதியைப் பயன்படுத்தி பின்வரும் முறைகளில் வெப்பவுள்ளுறை மாற்றங்கள் துணியப்படும்.
1. வெப்ப இரசாயன வட்ட முறை
2. வெப்ப இரசாயன சமன்பாட்டு முறை
3. வெப்ப இரசாயன வரைபட முறை
வெப்ப இரசாயன வட்ட முறை
தரப்படும் வெப்ப இரசாயனத் தரவுகளை ஓர் வட்டமான ஒழுங்கில் குறிப்பதன் மூலம் வெப்பவுள்ளுறை துணியும் முறையாகும்.
Note :-
1. வெப்ப இரசாயன வட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும் தாக்கங்கள் சமப்படுத்தப் பட்டிருத்தல் வேண்டும்.
2. வெப்பவுள்ளுறை மாற்றங்கள் அம்புக்குறியினால்
காட்டப்பட்டிருத்தல் வேண்டும்.
3. Hess இன் விதியைப் பிரயோகிக்கையில் ஒரே திசையில்
அம்புக்குறிகள் கூட்டப்பட்டு எதிர்க்;கும் அம்புக்குறிகளுக்கு
சமப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
வெப்ப இரசாயன சமன்பாட்டு முறை
தாக்கிகள், விளைவுகளினது நியமத் தோன்றல் வெப்பங்கள் தரப்படுமிடத்து பின்வரும் சமன்பாடு முறையால் வெப்பவுள்ளுறை மாற்றங்கள் துணியப்படும்.
வெப்ப இரசாயன வரைபட முறை
தரப்படுகின்ற வெப்ப இரசாயனத் தரவுகள் ஓர் சக்திமட்ட வரைபடத்தில் குறிப்பதால் வரையப்படும் முறையாகும்.
வெப்பவுள்ளுறை வரைபடம் வரையப்படும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள்
1. ஒரு நிலையிலுள்ள அணுக்களின் மொத்த எண்ணிக்கை மற்றைய
நிலையிலுள்ள அணுக்களின் மொத்த எண்ணிக்கைக்கு சமனாக
இருத்தல் வேண்டும்.
2. ஒவ்வொரு நிலையிலும் பிறதிருப்பம், பௌதீக நிலை என்பன
குறித்துக்காட்டப்படல் வேண்டும்.
3. வெப்பவுள்ளுறை பெறுமானங்கள் அளவீட்டின் படி குறிக்கப்படல்
வேண்டும்.
No comments:
Post a Comment