Monday, May 7, 2018

வெப்ப உள்ளுறை மாற்றம் (Enthalphy Change)(∆H)

விளைவுகளின் வெப்பவுள்ளுறைக்கும் தாக்கிகளின் வெப்பவுள்ளுறைக்கும் இடையிலான வித்தியாசம் வெப்பவுள்ளுறை மாற்றம் எனப்படும்.

∆H = ∑ விளைவுகளின் வெப்ப உள்ளுறை - ∑ தாக்கிகளின் வெப்ப உள்ளுறை

இங்கு ∆H = +  எனின் அகவெப்பத்தாக்கமாகும்.
                ∆H = -  எனின் புறவெப்பத்தாக்கமாகும்.
வெப்பவுள்ளுறை மாற்றத்தின் அடிப்படையில் தாக்கங்கள் இரு வகையாகப் பிரிக்கப்படும்.
1. அகவெப்பத்தாக்கம் (Endothermic Reaction)
2. புறவெப்பத்தாக்கம் (Exothermic Reaction)

அகவெப்பத்தாக்கம் (Endothermic Reaction)
தாக்கிகள் சக்தியை உறிஞ்சுவதனால் நடைபெறும் தாக்கங்களாகும். இதனால் சூழல் குளிர்ச்சியடையும்.

இங்கு விளைவுகளின் சக்தி தாக்கிகளின் சக்தியை விட அதிகமாகும்.

அகவெப்பத்தாக்கத்தின் விளைவுகள் கூடிய சக்தியைக் கொண்டிருப்பினும் இயற்கையில் இருக்கிறது.
Eg:- 1. CaCO3(s) ஐ வெப்பமேற்றுதல்
        2. CO(NH2)2(s), NH4Cl(s) ஐ நீரில் கரைத்தல்

புறவெப்பத்தாக்கம் (Endothermic Reaction)
தாக்கிகள் சூழலுக்கு வெப்ப சக்தியை வெளியேற்றி விளைவுகளைத் தரும் தாக்கங்களாகும். இதன்போது சூழல் சூடாகும்.

இங்கு தாக்கிகளின் சக்தி விளைவுகளின் சக்தியை விட அதிகமாகும்.

Eg:- 1. CaO(s) ஐ நீரில் கரைத்தல்
        2. C(s) ஐ எரித்தல்

Note :- 
 1. அகவெப்பத்தாக்கங்களோ, புறவெப்பத்தாக்கங்களோ சுயமாக     
     நடைபெறாது. ஏனெனில் இத்தாக்கங்களை ஏவற்தடைச்சக்தி   
     தடுத்துக் கொண்டிருக்கின்றது.
2. ஒரு தாக்கத்தில் விளைவுகள் குறைந்த சக்தியைக் 
    கொண்டிருப்பின் ஒப்பீட்டு ரீதியில் உறுதி கூடியவை ஆகும்.

No comments:

Post a Comment