Wednesday, June 3, 2015

செங்குருதிக்கலங்கள்/ செங்குழியங்கள் (Red Blood Cells/ Erythrocytes)

• 7.5µm விடடமுடைய கலங்கள்.
• சிறிய/ கருவற்ற/ ஈமோகுளோபின் எனும் செந்நிறப்பொருளைக் கொண்ட
   கலங்கள்.
• இரு குழிவான வட்டத்தட்டுருவான கலங்கள். இவை தனியாகவோ அல்லது
   தொகுதிகளாகவோ குருதிப்பாய்மத்தில் இயங்கிய வண்ணம் காணப்படும்.

• இக்கலங்களின் விட்டம் குருதிமயிர்க்குழாய்களின் உள்விட்டத்தை ஒத்துக்
   காணப்படுவதனால் குருதிமயிர்க்குழாய்களினூடாக மெதுவாகவே
  அசைகின்றன.
• இதன் காரணமாக வாயுப்பரிமாற்றம் வினைத்திறனாக நடைபெறுகின்றது.
• 1ml3 குருதியில் 5,000,000 செங்குழியங்கள் உள்ளன.
• செங்குழியங்களிலுள்ள ஈமோகுளோபின் காரணமாக குருதிக்குச் செந்நிறம்
  கிடைக்கின்றது. இது இரும்பைக்கொண்ட Haematin எனும்
  குருதிநிறப்பொருளையும், Globin எனப்படும் புரதத்தையும் கொண்டு
  காணப்படும்.
• செங்குழியங்கள் மனிதனின் இளம்பருவத்தில் ஈரலிலும், மண்ணீரலிலும்
  உருவாக்கப்படுகின்றன. எனினும் நிலையுடலி நிலையில் செவ்வென்பு
  மச்சையில் உருவாக்கப்படுகின்றன.
• செங்குழியங்கள் 4மாதம்/ 120 நாட்கள் வாழ்தகவுடையவை.
• இவை தங்களின் வாழ்தகவின் பின்னர் ஈரல், மண்ணீரல் ஆகியவற்றில்
  அழிக்கப்படுகின்றன.

செங்குழியத்தின் தொழில்கள்
1.ஒட்சிசன்செறிவு கூடிய இடத்திலிருந்து ஒட்சிசன்செறிவு குறைந்த
   இடத்திற்கு ஒட்சிசனை ஒட்சி ஈமோகுளோபின் வடிவில் கடத்துதல்.
   இதன்போது குருதியின் செந்நிறம் அதிகரித்துக் காணப்படும்.
2.சுவாச மேற்பரப்பிலிருந்து செல்லும் குருதி, கலங்களை அடைந்தவுடன்
   ஒட்சிஈமோகுளோபின் பிரிகையடைந்து ஒட்சிசன் வெளிவிடப்படும்.
   இவ்வாறு வெளிவிடப்படும் ஒட்சிசன் கலங்களினுள் பரவலடையும்.

No comments:

Post a Comment