வலை பின்னும் சிலந்திகளைப் பற்றித்தான் நாம்
கேள்விப்பட்டிருக்கின்றோம். வலை பின்னத் தெரியாத சிலந்திகளும் இந்தப் புவியில்
உண்டு. இவை மற்ற புச்சிகளைப் போல் கால்நடையாக வெகுதூரம் வரை சென்று இரையை
வேட்டையாடுகின்றன.
இத்தகைய சிலந்திகளில் முதலிடம் பிடிப்பது "
தாரந்துலா" என்னும் சிலந்திப் பூச்சியாகும். இதன் உருவம் எதிரிகளுக்கு அச்சமூட்டும்
வகையில் இருக்கும். இது சிறுசிறு பறவைகள், பூச்சிகள் போன்றவற்றை ஓசையின்றி நடந்து
சென்று வேட்டையாடிவிடும். இதற்கு வசதியாக தாவரங்கள், செடி, கொடிகளில் இது
வசிக்கிறது. பறவைகளுக்கும், பூச்சிகளுக்கும் தான் இது ஆபத்தான சிலந்தியே தவிர,
மனிதர்களுக்கு அல்ல.
No comments:
Post a Comment