• சாதாரண மனிதனின் உடலில் 5.5 லீற்றர் குருதி காணப்படும். எனினும்
அது மனித உடல் நிறைக்கேற்ப மாறுபடலாம்.
• எமது உடலில் வெட்டுக்காயம் அல்லது உராய்வு ஏற்படும் போது குருதி
வெளியேறும். பொதுவாக எமது உடலில் இருந்து ஒரு துளி குருதி
வெளியேறினால் அது மீண்டும் உருவாக 20 நிமிடங்கள் வரை எடுக்கும்.
• உடலில் குருதி ஆனது குருதிக் கலன்களினுள் காணப்படுகின்றது.
உடலில் இருந்து குருதியைப் பெறும்போது அது ஏகவினத்தன்மை கொண்ட பாய்மமாகக் காணப்பட்ட போதிலும் அதனைப் பரிசோதனைக்குழாயில் இட்டு வைத்ததும் அது கடும் சென்நிற ஜெலி போன்ற திண்மக் கூறாகவும் வேறாகிக் காணப்படும்.
குருதிப்பூச்சைக் கொண்ட வழுக்கியொன்றை நுணுக்குக்காட்டியின் கீழ் அவதானிப்பின் குருதியில் உள்ள கூறுகளை தெளிவாக அவதானிக்க முடியும்.
குருதிப்பாய்மத்தில் பல எண்ணிக்கையான கலங்கள் இருப்பதைக் காணலாம். அவற்றுள் அனேக கலங்கள் செந்நிறமானவை. அவற்றைத் தவிர பல அளவுகளினாலான வேறு கலங்களையும் அவதானிக்கலாம்.
குருதியில் காணப்படும் செங்குழியங்களை அகற்றி வெண்குழியங்களை தெளிவாக அவதானிப்பதற்கு ஒரு குருதித்துளியை மூடித்துண்டால்(Cover Slip) மூடி சுற்றிவர ஜதான அசற்றிக்கமிலத் துளிகளை இட்டு அவதானிக்கும்போது இது சாத்தியமாகும்.
குருதித்திரவவிழையத்தின் தொழில்கள்
1. திரவவிழையத்தின் காரணமாக குருதி பாய்மமாகக் காணப்படுகின்றது.
எனவே பதார்த்தங்கள் உடல் முழுவதும் எடுத்துச் செல்லும் தொழிலைப்
புரிகின்றது.
2. குருதியில் உள்ள போசனைப்பொருட்கள், கழிவுப்பதார்த்தங்கள்,
ஓமோன்கள் ஆகியன அனைத்தும் குருதித்திரவவிழையத்தின் மூலமே
உடலின் தேவையான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

No comments:
Post a Comment