அதிகாலை வேளையில் புற் தாவரங்களின் இலைகளின் நுனிகளிலும்ää சேம்புத் தாவரங்களின் இலைகளின் நுனிகளிலும் திரவத்துளிகள் காணப்படுவதை அவதானிக்கலாம். இவை இத்தாவர உட்பகுதியிலிருந்து நீர் செல்துளைகளினூடாக வெளியேறிய நீர்த்துளிகள் கசிவு ஆகும். இவை பின்வரும் கூறுகளைக் கொண்டன.
அதிகளவு நீர் + கரையப்பதார்த்தங்கள் + கனியுப்புக்கள்
இது வேரமுக்கத்தின் ஒரு நேரடி விளைவாகும். ஆவியுர்ப்பிற்கு எதிரான நிபந்தனைகளிலேயே இது நடைபெறும். ஏனெனில் மண்ணீர் அடக்கமும் சாரீரப்பதனும் உயர்வாக இருக்கும் போதே பெரும்பாலான தாவரங்களில் வேரமுக்கம் ஏற்படும் இச்சந்தர்ப்பங்களில் தாவரத்தினுள் அயன்கள் உயிர்ப்பான அகத்துறிஞ்சல் மூலம் உட்செல்லும் இவ்வயன்கள் வேரின் காழினுள் கரையச் செறிவை அதிகரிப்பதனால் அதன் நீரழுத்தம் மண்ணீர் அழுத்தத்தை விடக்குறையும். எனவே தாவரத்தினுள் நீர் உட்செல்லும் இதன் காரணமாக ஏற்படும் அமுக்கமே வேரமுக்கமாகும்.
No comments:
Post a Comment