நீர்ப்பற்றாக்குறையான சூழலில் வாழும் தாவரங்கள் மேலதீக நீரிழப்பைத் தடுப்பதற்காக பின்வரும் இசைவாக்கங்களைக் காட்டுகின்றன.
1. இலைகள் உதிர்தல், முட்களாக திரிபடைதல், தண்டு சதைப்பற்றாதல்
Eg:- நாகதாளி, கள்ளி
2. குழிகளில் அமிழ்ந்துள்ள இலைவாய்கள் காணப்படல்.
Eg:- இராவணன் மீசை, அலரி
3. இலைகளின் மீது மயிர்கள் காணப்படல்
Eg:- பூசணி, சூரியகாந்தி
4. தடித்த புறத்தோல் காணப்படல்
Eg:- அலரி, ஆலமரம்
5. இலைகள் சுருண்டு காணப்படல்
Eg:- நெல், புல்
6. குறிப்பிட்ட காலத்தில் இலைகள் உதிருதல் (இலையுதிர்வு)
Eg:-இறப்பர், தேக்கு
தாவரங்களில் ஆவியுர்ப்பின் அனுகூலங்கள்
1. தாவரங்களின் உயரமான பகுதிகளுக்கு பதார்த்தங்கள் கடத்தப்படல்.
2. இலைகளைச் சுற்றி நீராவி காணப்படுவதனால் சூரிய வெப்பத்தினால்
இலைகளுக்கு பாதிப்பு ஏற்படாது.
3. தாவரங்கள் குளிர்ச்சியடையும்.
4. தாவரங்களால் அதிகளவு நீர் உறிஞ்சப்படல்.
5. தாவரத்தினுள் கனியுப்புக்களை பரம்பலடையச் செய்தல்.
தாவரங்களில் ஆவியுர்ப்பின் பிரதிகூலங்கள்
1. தாவரங்களில் நீரிழப்பு ஏற்படும்.
2. தாவரங்கள் வாடுவதால் ஒளித்தொகுப்புப் பாதிக்கப்படல்.
No comments:
Post a Comment