Saturday, June 6, 2015

பெயரீடு(Nomenclature)

இது இருவகைப்படும்.
1. பொதுப்பெயரீடு
2. விஞ்ஞானப்பெயரீடு/ இருசொற்பெயரீடு

பொதுப்பெயரீடு
1. எந்தவிதமான விஞ்ஞான அடிப்படையும் இன்றி மனிதனின் வசதி கருதி
    அங்கிகளைப் பெயரிடுதல்.பொ
2. பொதுப்பெயர் வெவ்வேறு மொழிபேசும் மக்களால் வேறு வேறாக
    உச்சரிக்கப்படும்.
3. அத்துடன் ஒரு தாவரம் அல்லது விலங்கு பல பெயர்களால்
    அழைக்கப்படுவதை அறிந்திருப்பீர்கள்.
4. எனவே உலகில், எந்நாட்டில், எவ்வடத்தில் இருப்பினும் அங்கியொன்றை
    குறித்தவொரு பெயரினாலேயே அழைக்க வேண்டுமென்ற விடயம்  
     விஞ்ஞானிகளால் காலத்துக்குக் காலம் வலியுறுத்தப்பட்டு வந்தது.
விஞ்ஞானப் பெயரீடு
1. பொதுப்பெயரீட்டால் ஏற்படும் சிக்கலைத் தவிர்ப்பதற்கு சாவதேச ரீதியில்
    ஏற்றுக்கொள்ளக் கூடியவாறு அங்கிகளை விஞ்ஞானரீதியில் பெயரிடுதல்.
2. அங்கிகளுக்கான விஞ்ஞானப் பெயர்கள் இருசொற்பெயரீட்டு முறையில்
     இடப்படுகின்றன.

No comments:

Post a Comment