தென்னாபிக்க நாட்டில் நார்தன் கேப் மாநிலத்தில் கிம்பெர்லே என்னுமிடத்தில்
அமைந்துள்ள வைரச்சுரங்கம் தான் உலகிலேயே மிகப்பெரிய வைரச்சுரங்கமாகும். 1871 யூலை
மாதம் தொடங்கி 1914 ஆம் ஆண்டு வரை 50,000 தொழிலாளர்கள் கோடரி மற்றும் மண்வெட்டியைப்
பயன்படுத்தி 2,720 கிலோகிராம் வைரத்தினை வெட்டி எடுத்துள்ளனர்.
இந்தப்பள்ளமானது 42 ஏக்கர் மேற்பரப்பில் 463 மீற்றர் (1,519 அடி) அகலத்துடனும்,
240 மீற்றர்(790அடி) ஆழத்துடனும் காணப்படுகிறது.
பள்ளத்தின் ஒரு பகுதியில் குப்பைகளைக் கொட்டியதால் சுமார் 215 மீற்றர்
வரை(705அடி) தற்போது பள்ளத்தின் ஆழம் குறைந்துள்ளது. மேலும், 40 மீற்றர்(130 அடி)
அளவிற்கு தற்போது நீர் நிரம்பியுள்ளது.
டீ பீர்ஸ் (De beers) சகோதரர்களுக்குச் சொந்தமான பண்ணையில்
கோல்ஸ்பெர்க்(Colesberg) என்னுமிடத்தில் Red Cap Party என்ற அமைப்பின்
உறுப்பினர்களால் முதன்முதலாக இங்கு வைரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட'டது.
No comments:
Post a Comment