1. 0.3μm - 5μm அளவுடைய தனிக்கல அங்கிகளாகும்.
2. எளிய முதலுரு காணப்படும்.
3. முதலுருவைச் சூழ பெப்ரிடோகிளைக்கன்/ மியூரின்/ மியூக்கோ பெப்ரைட்டினால் ஆன கலச்சுவர் காணப்படும்.
4. திட்டமான கரு, கருமென்சவ்வு காணப்படாது.
5. பிளவு மூலம் அல்லது வித்திகளை உருவாக்கி இனம் பெருக்கும்.
6. பல்வேறு போசனை முறைகளைக் கொண்டிருக்கும்.
போசனையின் அடிப்படையில் பற்றீரியாக்களின் வகைகள்
1. அழுகல்வளரி பற்றீரியாக்கள்
இவை உக்கலடையும் தாவரப்பகுதிகளில் வளரும்.
2. ஒட்டுண்ணி பற்றீரியாக்கள்
உயிரங்கிகளில் (இழையங்களில்) வளரும். நோய்களை ஏற்படுத்தும்
காரணியாகவும் விளங்குகின்றது.
3. ஒன்றியவாழிப் பற்றீரியாக்கள்
அவரைக்குடும்பத் தாவர வேர்முடிச்சுக்களில் காணப்படும் பற்றீரியாக்கள்
வளிமண்டல நைதரசனை தாவரங்களால் உறிஞ்சப்படக் கூடியநிலைக்கு
மாற்றியமைக்கும். இது நைதரசன் பதித்தல் எனப்படும். இது ஒன்றியவாழி
ஈட்டம் ஆகும்.
Eg:- றைசோபியம் இலகுமினேசாரம்
4. இரசாயனத் தொகுப்பு பற்றீரியாக்கள்
இரசாயனத் தாக்கங்களை ஏற்படுத்தி அதிலிருந்து பெறும் சக்தி மூலம் உணவு தயாரிக்கும்.
Eg:- இரும்பு பற்றீரியாக்கள், இரும்பை ஒட்சியேற்றம் செய்து சக்தியைப்
பெறுகின்றன. இச்சக்தியைப் பயன்படுத்தி இவை உணவைத் தொகுக்கும்.
நோயை உருவாக்கும் பற்றீரியாக்கள்
1. கசம் - மைக்கோ பற்றீரியம் ரியூபகுளோசிசு
2. நெருப்புக்காய்ச்சல் - சல்மனெல்லா தைபீ
3. ஈர்ப்புவலி - குளோஸ்திரிடியம் ரெற்றனை
4. வயிற்றோட்டம் - சிஜெல்லா டிசென்றியே
5. வாந்திபேதி - விப்ரியே கொலரே
Thanks 😊
ReplyDelete