பறவைகள் யாவும் இதிலடங்கும்
1. வான் வாழ்க்கைக்கு இசைவாக்கமடைந்த விலங்குகள். சில தரை, நீர் ஆகிய
வற்றில் வாழும்.
2. உடல் அருவிக்கோட்டு உருவுடையது.
3. உடலானது தலை, முண்டம், வால் எனப்பிரிக்கப்பட்டுள்ளது.
4. மாறா வெப்பநிலைக் குருதியுடையன. (இளஞ்சூட்டுக் குருதி/ ஓர்சீர் வெப்பநி
லைக் குருதி)
5. சோடியான அவயவங்கள் காணப்படும். முன்சோடி சிறகுகளாகத் திரிபடைந்து காணப்படும்.
6. பொதுவாகப் பறக்கக்கூடியன.
7. பாரமற்ற என்புகள் காணப்படும்.
8. உடல் இறக்கைகளால் மூடப்பட்டிருக்கும்.
9. வாயானது அலகுகளாக நீட்டப்பட்டிருக்கும். பற்கள் இல்லை.
10. இதயம் நான்கு அறைகளைக் கொண்டது.
11. நுரையீரல் மூலம் சுவாசிக்கும்.
12. முட்டையிட்டு அடைகாத்து இனம் பெருக்கும்.
Eg:- தாரா, கழுகு, கோழி
No comments:
Post a Comment