Showing posts with label கட்டமைப்பும் பிணைப்பும். Show all posts
Showing posts with label கட்டமைப்பும் பிணைப்பும். Show all posts

Monday, August 9, 2021

இரசாயனப் பிணைப்புகள் - Chemical bond

இரசாயனப் பிணைப்புக்கள் உருவாதல்
மூலகங்கள் உறுதிநிலை அடைவதற்காக பிணைப்புக்களை உருவாக்கு கின்றன.
இரசாயனப் பிணைப்புக்கள் தோற்றுவிக்கப்படும்போது சக்தி வெளியேறு வதனால் உருவாகும் கூறுகள் உறுதியடைகிறது.
பிணைப்புக்களைத் தோற்றுவிப்பதில் இலத்திரன் ஏற்றலோ அல்லது இழத்தலோ அல்லது பங்கீடு செய்தலோ நடைபெறுவதன் மூலம் தனது ஈற்றமைப்பை இயன்றவரை பூர்த்தி செய்கிறது இது எண்மவிதி அல்லது சடத்துவ விதி எனப்படும்.
ஆனால் இவ்விதிக்கு உட்படாத மூலக்கூறுகள் காணப்படுகின்றது.

இரசாயனப் பிணைப்பின் வகைகள்
இரசாயனப் பிணைப்புக்களில் இலத்திரன்கள் சம்பந்தப்படுகின்றதன் அடிப்படையில் பிணைப்புக்கள் பின்வரும் வகைகளாகப் பிரிக்கப்படும்.
1. பங்கீட்டு வலுப்பிணைப்பு
2. ஈதற் பிணைப்பு
3. அயன் பிணைப்பு
4. உலோகப் பிணைப்பு

இரசாயனப் பிணைப்புக்களில் இலத்திரன்கள் சம்பந்தப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்கள்
1.மூலக அணுவின் ஈற்றோட்டு இலத்திரன் எண்ணிக்கைக்கும் ஆனால் 
   உருவாகும் பிணைப்புக்களின் எண்ணிக்கைக்குமிடையே தொடர்பு 
   காணப்படுகின்றது.
2. நீர்க்கரைசல்களை மின்பகுக்கும் போது புதிய விளைவுகள் தோன்றுகிறது. 
   இங்கு பிணைப்புக்கள் உடைதலும் உருவாதலும் நடைபெறுகிறது.
3. மின்கலங்களின் இயக்கத்தின் போது மின் உருவாக்கப்படுகின்றது. இதன் 
போது பிணைப்புக்கள் உடைதலும்ää உருவாதலும் நடைபெறுகிறது.

Monday, May 18, 2015

கட்டமைப்பும் பிணைப்பும்



உபஅலகு
தலைப்பு
01.
இரசானப் பிணைப்புக்கள் உருவாதல்
02.
பங்கீட்டுவலுப்பிணைப்பு
03.
சாலகங்கள்
04.
ஈதல் பங்கீட்டுவலுப்பிணைப்பு
05.
காபனின் கலப்பு வகைகள்
06.
அயன் பிணைப்பு
07.
உலோகப் பிணைப்பு
08.
மூலக்கூற்றிடை விசைகள்
09.
ஐதரைட்டுக்களின் கொதிநிலை பற்றி விளக்குதல்
10.
மூலக்கூற்றுவடிவங்கள்
11.
ஒட்சியேற்றமும் தாழ்த்தலும்
12.
மூலக்கூறுகளின் கட்டமைப்புகள், இலத்திரன் கட்டமைப்புகள்
13.
பரிவுக்கட்டமைப்புக்கள்
14.
மூலக்கூறுகளின் கலப்புக்களின் அடிப்படையில் வடிவங்களைத் தீர்மானித்தல்
15.
அசேதன சேர்வைகளுக்கான IUPAC பெயரீடு
16.
சிக்கல் சேர்வைகளுக்கான IUPAC பெயரீடு