Saturday, July 2, 2016

தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் - நுண்ணங்கியியல்(Micro Biology)

பங்கசு(Fungi)
1. யூக்கரியோட்டா கல ஒழுங்கமைப்பு உண்டு. மென்சவ்வினால்  
    சூழப்பட்ட புன்னங்கள் உண்டு.
2. புவியில் காணப்படும் பிரதானமான பிரிகையாக்கிகள் ஆகும்.
3. பெரும்பாலானவை அழுகல்வளரிகள்(Saprotrophs). இவை இறந்த  
    தாவர, விலங்குகள் போன்ற சேதனப் பொருட்களை பிரிந்தழித்து  
    போசனையைப் பெறும்.
4. சில பங்கசுக்கள் ஒட்டுண்ணிகளாகும். எனினும் சில  
    ஒன்றியவாழிகளாகும்.
5. இவை ஒளித்தொகுப்பு மேற்கொள்வதில்லை.
6. சில தனிக்கலத்தாலானவை.  Eg:- மதுவம்(Yeast)
7. சிலவற்றில் இழைகள் காணப்படும். இழைகள் பிரிசுவர் 
   கொண்டவையாகவோ, பிரிசுவர் அற்றவையாகவோ காணப்படும்.    இவை கூட்டாக பங்கசு வலையை உருவாக்கும்.
8. கலச்சுவர் கைற்றினால் ஆக்கப்பட்டிருப்பதுடன், சேமிப்புணவு 
    கிளைக்கோஜன் ஆகும்.
9. வித்திகள் மூலம் இனம்பெருக்கும்.

Note:- பங்கசுக்கள் பின்வரும் வகைகளாகப் பிரிக்கப்படும்.

No comments:

Post a Comment