ஒரு மூலக அணுவுடன் சேர்கின்ற அல்லது அம்மூலக அணுவில் இருந்து இடப்பெயர்க்கப்படுகின்ற ஐதரசன் அணுக்களின் எண்ணிக்கை அக்குறித்த மூலகத்தின் வலுவளவு எனப்படும்.
Eg:-
HCl  இல் காணப்படும் H அணுக்களின் எண்ணிக்கை = 1 எனவே Cl இன் வலுவளவு = 1
H2O இல் காணப்படும் H அணுக்களின் எண்ணிக்கை = 2 எனவே O இன் வலுவளவு = 2
NH3 இல் காணப்படும் H அணுக்களின் எண்ணிக்கை = 3 எனவே N இன் வலுவளவு = 3
CH4 இல் காணப்படும் H அணுக்களின் எண்ணிக்கை = 4 எனவே C இன் வலுவளவு = 4
மேலே தரப்பட்டுள்ள தாக்கத்தில் Mg த்தினால் இடம்பெயர்க்கப்படும் H அணுக்களின் எண்ணிக்கை 2 ஆகும்.
எனவே Mg இன் வலுவளவு = 2 ஆகும்.
Note:-  ஐதரசன் அணுவுடன் நேரடியாக இணையாத மூலக சேர்வையொன்றில் காணப்படும் மூலக அணுக்களின் வலுவளவைத் துணியும் போது அவ்வணுக்கள் தனித்தனியாக ஐதரசன் அணுக்களுடன் இணைவதன் அடிப்படையில் அம்மூலகங்களின் வலுவளவு துணியப்படும். 
Eg:- MgO இல்
1.Mg இல் H அணு பின்வருமாறு இணைந்து சேர்வையை உருவாக்குகின்றது. - MgH2
MgH2 இல் காணப்படும் H அணுக்களின் எண்ணிக்கை = 2
எனவே Mg இன் வலுவளவு = 2
எனவே Mg இன் வலுவளவு = 2
2.O இல் H அணு பின்வருமாறு இணைந்து சேர்வையை உருவாக்குகின்றது. - H2O
H2O இல் காணப்படும் H அணுக்களின் எண்ணிக்கை = 2
எனவே O இன் வலுவளவு = 2
எனவே O இன் வலுவளவு = 2
 
No comments:
Post a Comment