தாற்றனின் அணுக்கொள்கைக்கு அமைய அணுக்கள் திணிவைக் கொண்ட துணிக்கைகள் ஆதலால், அதன் திணிவை அறிந்து கொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது.
திணிவிற்கான SI அலகு Kg ஆக இருந்தபோதிலும் அணுக்கள் மிக சிறிய துணிக்கைகள் ஆதலால் அதன் சிறிய திணிவுப் பெறுமானத்தை அளவிட பயன்பாட்டின் வசதி கருதி வேறு அளவிடை அவசியமாகிறது. இதற்காகப் பயன்படும் அளவிடை அணுத்திணிவு அலகு எனப்படும்.
இதற்கு சார்பாக அளவிடப்படும் அணுத்திணிவு பெறுமானங்கள் சாரணுத்திணிவு எனப்படும்.
சாரணுத் திணிவிற்கான வரைவிலக்கணம்.
குறித்த மூலக அணுவொன்றின் சராசரித் திணிவிற்கும், சமதானியின் அணுவொன்றின் திணிவின் திணிவின்  1/12 பங்கிற்கும் இடையிலான விகிதம் சாரணுத்திணிவு எனப்படும்.
சாரணுத்திணிவிற்கு அலகு இல்லை.
தொடர்பணுத்திணிவை துணிய முதலில் நியமமாக 11H சமதானியும், பின்பு 168O சமதானியும், தற்போது 126C சமதானியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
மூலகங்களின் சாரணுத்திணிவை முதலில் கனிற்சாரோவும் அதன் பின்னர் தூலோன் பெற்றிற் அவர்களாலும் இறுதியாக அஸ்ரன் அவர்களும் துணிந்து காட்டினர்.
அணுத்திணிவலகு
126C சமதானியின் அணுவொன்றின் திணிவின் 1/12 பங்காகும்.
அணுத்திணிவலகின் அலகு கிராம் (g) ஆகும்.
அணுத்திணிவலகின் பெறுமானத்தைத் துணிதல்

No comments:
Post a Comment