Wednesday, July 1, 2015

இரசாயன சேர்க்கை விதிகள்

இரசாயனவியலின் ஆரம்ப காலங்களில் விஞ்ஞானிகளால் எடுத்துக் கூறப்பட்ட விதிகளே இரசாயன சேர்க்கை விதிகளாகும்.
1. திணிவுக்காப்பு விதி
2. மாறா அமைப்பு விதி/ திட்டவிகிதசமவிதி
3. பல்விகித சம விதி
4. இதரவிதர விகித சம விதி

திணிவுக்காப்பு விதி

மூடிய தொகுதியொன்றில் நிகழும் இரசாயனத் தாக்கத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் தாக்கிகளின் திணிவானது விளைவுகளின் திணிவுக்குச் சமனாகும்.

இவ்விதியைக் கூறியவர் இலாவோசியர் ஆவார். இதனை வாய்ப்புப் பார்த்தவர் இலன்டோட் என்பவர் ஆவார்.

சக்திச் சமன்பாடு 
தாக்கிகளினதும் விளைவுகளினதும் மொத்தசக்தி மாறிலியாகும்.

ஐன்ஸ்ரைனின் சக்திச் சமன்பாடு

 E = mc2           (E - சக்தி,  m - திணிவு, c - ஒளியின் வேகம்)
Note:- இரசாயனத் தாக்கமொன்று நிகழும்போது புறக்கணிக்கத்தக்க அளவு சக்தி            இழப்பு நிகழ்கின்றது. இதற்காக சிறியளவு திணிவு அழிக்கப்படுகின்றது.
           எனவே திணிவுக்காப்பு விதி தவறானதாகும். ஆனால் சக்திக்காப்பு
           விதியே சரியானதாகும். 

மாறா அமைப்பு விதி/ திட்டவிகிதசம விதி 
ஒரு தூய சேர்வை எந்த முறையினால் ஆக்கப்பட்டிருப்பினும் அதில் காணப்படும் மூலகங்களின் நிறைகளுக்கிடையிலான விகிதம் திட்டமானதாகும் அல்லது மாறிலியாகும்.
இவ்விதியைக் கூறியவர் புரொஸ்ட் ஆவார்.
சமதானிகள் கருதப்படும் போது இவ்விதி மீறப்படுகின்றது.

பல்விகிதசம விதி
இரண்டு மூலகங்கள் சேர்ந்து உருவாக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட சேர்வைகளில் குறித்த மூலகத்தின் குறித்த நிறையுடன் சேர்கின்ற மற்றைய மூலகத்தின் நிறைகளுக்கிடையிலான விகிதம் ஓர் எளிய முழுவெண்ணாகும்.
இவ்விதியைக் கூறியவர் தாற்றன் ஆவார்.
பாரிய சேர்வைகள் கருதப்படும்போது இவ்விதி மீறப்படுகின்றது.
Eg:-  WCO : WCO2
         WC : WC
              1 : 2

இதரவிதர சம விதி
மூன்று மூலகங்களால் ஆக்கப்படும் மூன்று சேர்வைகளுக்கிடையிலான தொடர்பை விளக்கப் பயன்படுகின்றது.
இவ்விதியைக் கூறியவர் றிச்டர் ஆவார்.

No comments:

Post a Comment