அரசு தனது குறுங்கால நிதித் தேவையை(மாதம் 1 - 6 வரை) திறைசேரி உண்டியல்களை 
விற்பனை செய்வதன் மூலம் நிறைவு செய்து கொள்ளும் இவ்வுண்டியல்கள் விற்பனை 
செய்யப்படும் போதே கொள்வனவு செய்யும் நிறுவனங்களின் முதலீடு முதலாம் படி திறைசேரி 
உண்டியல் எனவும், முதிர்வுக்காலம் வரை உரிமையை பகிர்ந்து கொள்ளும் செயலில் ஈடுபடும் 
நிறுவனங்கள் இரண்டாம் படி திறைசேரி உண்டியல் எனவும் அழைக்கப்படும். இலங்கையின் 
முதலாம் படி திறைசேரி உண்டியல்களின் பிரதான கொள்வனவாளராக உள்ளது இலங்கை மத்திய 
வங்கியாகும். ஏனைய வணிக வங்கிகளும், முதலீட்டு நிறுவனங்களும், திறைசேரி 
உண்டியல்களைக் கொள்வனவு செய்யும் சந்தையில் தற்போது பிரவேசித்துள்ளன. திறைசேரி 
உண்டியல் சந்தை பற்றிய இரண்டாம் படிச் சந்தையொன்று 1981 இல் இலங்கையில் அறிமுகம் 
செய்யப்பட்டது.
முதலாம் படி திறைசேரி உண்டியல் சந்தை, இரண்டாம் படி திறைசேரி உண்டியல் சந்தை 
ஆகியவற்றிற்கிடையே காணப்படும் கழிவு விகிதாசார வித்தியாசம் மத்திய வங்கியினால் 
மத்திய வங்கியினால் பொறுப்பேற்றுக்கொள்ள முன்வந்துள்ளதால் திறைசேரி உண்டியல் பற்றிய 
இரண்டாம் படிச் சந்தையில் கொள்வனவு செய்ததில் நிறுவனங்களால் கூடிய கவனம் 
செலுத்தப்படுகின்றது.  
 

No comments:
Post a Comment