Tuesday, May 26, 2015

பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் - நி.பி 127


ஒரு குறித்த அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களுக்கு வேண்டிய நிதி நிர்வாக முறைகளை நிறைவேற்றுவதற்குப் பொறுப்பாக உள்ள உத்தியோகத்தர் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் ஆவார்.
இவர் தன்னுடைய அமைச்சின் கீழ் வருகின்ற திணைக்களங்களினது நிதி நிர்வாகம் தொடர்பாக நிதியமைச்சருக்கு பொறுப்பளிக்க வேண்டிய கடமைக்குரியவர் ஆவார்.
திணைக்களங்களை மேற்பார்வை செய்வது இவரது பிரதான கடமையாகும்.
அரசாங்கத்துக்குரிய வருமானங்கள் செலவுகள் போன்றவற்றின் கணக்கறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டியது நிதியமைச்சரின் பொறுப்பாகும். இதனை நிறைவேற்றுவதற்காக நிதியமைச்சர் சகல அமைச்சுக்களின் செயலாளர்களையும் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தராக நியமிக்கின்றார். அமைச்சு ஒன்றின் கீழ் இடம்பெறாத திணைக்களங்களின் தலைவர்களும் நிதியமைச்சரினால் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தராக நியமிக்கப்படுகின்றனர்.
உதாரணம் :-
  1. தேர்தல் ஆணையாளர்
  2. கணக்காய்வாளர் தலைமையதிபதி
பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரது பொதுவான கடமைகள்
  1. திணைக்களங்களினது நிதிசார் வேலைகளை திட்டமிடுதல்.
  2. கொடுக்கல் வாங்கல்களை சரியாகவும் முறையாகவும் மேற் கொள்ளுதல்.
  3. வருமான சேகரிப்பு செலவு என்பவற்றில் போதிய கட்டுப்பாட்டினை மேற்கொள்ளுவதற்கான முறைகளை வகுத்தல். 
  4. அரசுக்குரிய வருமதிகளை கணக்கீட்டு உத்தியோகத்தர்கள் அறவிடுவதை நெருக்கமாக அவதானித்தல்.
  5. திணைக்களத்தின் மதிப்பீட்டுக்கும் செலவுக்குமிடையிலான மாறுதல்கள் தொடர்பாக பகுத்தாய்வுப் பரிசோதனை செய்தல்.
  6. தமது அமைச்சின் கீழான திணைக்களங்களில் வழக்கிலுள்ள அல்லது உத்தேசிக்கப்பட்டுள்ள செலவினங்களை சிக்கனம் மற்றும் வினைத்திறன் அடிப்படையில் நெருக்கமாக பரிசீலனை செய்தல்.


    No comments:

    Post a Comment