மூளையின் கீழுள்ள வளரியிலிருந்து / நரம்புக் கீழ் வளரியிலிருந்து உருவாக்கப்படும். குருதிக்குழாய்ப் பின்னல்களையும், நரம்புநார்களையும் கொண்டுள்ளது.
ஓமோன்களைச் சுரப்பதில்லை எனினும் பரிவக்கீழால் சுரக்கப்படுகின்ற ADH, Oxytocin ஆகிய ஓமோன்களை நரம்பு நார் ஊடாக பெற்றுச் சேமித்து தேவையேற்படும் போது குருதியினுள் விடுவிக்கும்.
• GH/STH (Growth Hormone / Somato Trophic Hormone/ வளர்ச்சி ஓமோன்)
a. புரத் தொகுப்பை அதிகரிக்கச் செய்து, கலப்பிரிவை விரைவாக்கி இழைங்கள்
பெருகுவதற்கு உதவுதல்.
b. இழையங்கள் (தசை, என்பு, தொடுப்பிழையம்) / உடலின் வளர்ச்சியை
தூண்டும்.
• இளம் வயதில் / வளர்ச்சிப் பருவத்தில் குறைவாக சுரக்கப்பட்டால் -
குறண்மை / குள்ள நிலை (Dwarfism) தோன்றும்.
• இளம் வயதில் அதிகளவு சுரக்கப்பட்டால் - பேருருவுடமை (Gigantism)
தோற்றம் ஏற்படும்.
• நிறைவுடவிப் பருவத்தில் / என்பு பூரணமாக வளர்ந்த பின்னர் அதிகளவு
சுரக்கப்பட்டால் - அங்கப் பெருக்க நோய் (Acromegaly) ஏற்படும்.
• பெண்களில் பூப்படைதலின் பின்னர் குறைவாக சுரக்கப்பட்டால் - Simmond’s
Disease ஏற்படும்.
• TSH (Thyroid Stimulating Hormone)
a. ஐதரொயிட் சுரப்பியின் வளர்ச்சியை தூண்டுதல், தொழிற்பாட்டை
கட்டுப்படுத்துதல்.
b. ஐதரொயிட்சுரப்பியை தூண்டி T3, T4, Calcitonin போன்ற ஓமோன்களைச்
சுரக்கச் செய்தல்.
c. ஐதரொயிட் சுரப்பியால் I2 உள்ளெடுக்கப்படுதலை தூண்டும்.
d. குளிர்காலத்தில் அனுசேபவீதத்தை கூட்டுவதற்காக அதிகளவு சுரக்கப்படும்.
• ACTH (Adreno Cortico Trophic Hormone)
a. அதிரீனல் சுரப்பியின் மேற்பட்டையின் வளர்ச்சியை தூண்டும்.
b. அதிரீனல் சுரப்பியின் மேற்பட்டையை தூண்டி Ghuco Corticoids, Mineralo Corticoids
ஆகிய ஓமோன்களைச் சுரக்கச் செய்தல், விடுவிக்கச் செய்தல்.
• FSH (Follicle Stmulating Hormone)
a. பருவமடைந்த பெண்களில் சூலத்தை தாக்கி புடைப்பு / புடைப்புக்
கலங்களின் வளர்ச்சியை தூண்டுதல்.
முதல்புடைப்பிலிருந்து கிராபியன் புடைப்பு உருவாவதைத் தூண்டுதல்.
b. புடைப்புக்கலங்களால் Oestrogen சுரக்கப்படுவதை தூண்டுதல்.
குருதியில் Oestrogen இன் செறிவு அதிகரிக்கும் போது FSH இன் செறிவு
குறைவடையும்.
c. ஆண்களில் சுக்கிலச் சிறுகுழாய்களின் வளர்ச்சியை தூண்டு
விந்துற்பத்தியை தூண்டுதல்.
• LH (Lutionising Hormone / இலூட்டினாக்கும் ஓமோன்)
a. பருவடைந்த கருத்தரிக்காத பெண்களில் முதிர்ந்த கிராபியன் புடைப்பை
வெடிக்கச் செய்தல் / சூலிடலை நிகழ்துதல்.
b. மஞ்சட்சடலத்தை அழிவடையாது பாதுகாத்தல்.
மஞ்சட் சடலத்தின் விருத்தியை தூண்டுதல்.
c. மஞ்சட் சடலத்தை தூண்டி அதிகளவு Progestrone ஐ சுரக்கச் செய்தல்.
குருதியில்Progestrone இன் செறிவு அதிகரிக்கும்போது போது LH இன் செறிவு
குறைவடையும்.
ஆண்களில் ICSH (சிற்றிடைவெளிக்குரிய கலங்களைத் தூண்டும் ஓமோன்)
என அழைக்கப்படும்.
இது விதையிலுள்ள Leydigs கலங்களை தூண்டி Testresterone ஐ சுரக்கச் செய்யும்.
• Prolactin / Milk Hormone / Lactogenic Hormone / LTH /பால் ஓமோன்.
a. பெண்களில் பிரசவத்தை தொடர்ந்து முலைச்சுரப்பிகளைத் தூண்டி பாலை
உற்பத்தி செய்தல், விடுவித்தல்.
b. தாய்பாலிலுள்ள புரதங்களின் (Caseine, Lactabumin) தொகுப்பை தூண்டுதல்.
c. ஆண்களிலும் உண்டு – தொழில் இல்லை.
• ADH (Anti Diuretic Hormone / Vasopressin / எதிர் சிறுநீர் பெருக்க ஓமோன்)
a. சிறுநீரகத்தியின் சேய்மை மடிந்த குழாய், சேர்க்கும் கான் ஆகியவற்றின்
சுவர்களை தாக்கி நீர் மீளவகத்துறுஞ்சலை தூண்டுவதன் மூலம் உருவாகும்
சிறுநீரின் அளவை குறைத்தல்.
• அதிகளவு சுரக்கப்பட்டால் - கலன்கோள் வடிதிரவத்திலிருந்து நீர்
மீளவகத்துறுஞ்சப்படும் எனவே செறிவான சிறுநீர் கழிக்கப்படும்.
• குறைவாக சுரக்கப்பட்டால் - கலன்கோள வடிதிரவத்திலிருந்து நீர்
மீளவத்துறுஞ்சப்படுதல் குறையும் எனவே சிறுநீருடன் அதிகளவு நீர்
வெளியேறும். இத்தன்மை கழிநீரிழிவு / வெல்லமில்லா நீரிழிவு / Diabitles Incipites
என அழைக்கப்படும்.
• Oxytocin / Pitocin.
a. பிரசவ காலத்தில் கருப்பையின் சுவரைத் தாக்கி அதிலுள்ள மளமளப்பான
தசைகளை சுருங்கச் செய்து குழந்தை பிறத்தலுக்கு உதவுதல்.
b. முலைச்சுரப்பியின் மளமளப்பான தசைகளைச் சுருக்கி தாய்பாலின்
வெளியேற்றத்தைத் தூண்டுதல்.
• அதிகளவு சுரக்கப்பட்டால் - முதிராப்பிள்ளை பிறக்கும்.
• குறைவாக சுரக்கப்பட்டால் - குழந்தை பிறத்தல் பிந்தும்.

No comments:
Post a Comment