1. அலைநீளம் :- ஒரு அலை 
இயக்கத்தின் அடுத்துள்ள ஒரே நிலைகளின் இரு  
    தானங்களுக்கிடையிலான தூரம் அலைநீளம் எனப்படும்.
    அலைநீளத்தின் SI அலகு மீற்றர்(m)ஆகும்.
2. வீச்சம்:- ஒரு அலை 
இயக்கத்தில் ஒரு துணிக்கை அதன் ஆரம்ப நிலையில் 
    இருந்து ஒரு திசையில் அடையும் உச்ச இடப்பெயர்ச்சியே வீச்சம் 
எனப்படும்
    வீச்சத்தின் SI அலகு மீற்றர்(m)ஆகும்.
3. மீடிறன்:- ஒரு செக்கனில் ஏற்படும் அதிர்வுகளின் எண்ணிக்கை 
 அல்லது 
    ஓரலகு நேரத்தில் ஏற்படும் அலைவுகளின்/ சக்கரங்களின் எண்ணிக்கை 
 
    மீடிறன் எனப்படும்.
    மீடிறனின் SI அலகு ஹேட்ஸ்(Hz)ஆகும்.
4. அலையின் கதி:- ஒரு செக்கனில் அலை செல்லும் தூரமே அலையின் 
கதி 
    எனப்படும்.
    அலையின் கதியின் SI அலகு ms-1ஆகும்.
5. அலையின் வேகம்:- ஒரு செக்கனில் அலை செல்லும் இடப்பெயர்ச்சியே 
 
    அலையின்  வேகம் கதி எனப்படும்.
    அலையின் இடப்பெயர்ச்சியின் SI அலகு ms-1ஆகும்.  
 



No comments:
Post a Comment