Sunday, June 7, 2015

கழுதைப்புலி

பூனை ‘மியாவ்’ என்று குரல் எழுப்ப, நாய் குரைக்க, கழுதைப்புலி மட்டும் சிரிக்கிறது. பூனை, நாய் ஆகிய இரண்டின் உருவ அமைப்புக்களையும் கொண்ட கழுதைப்புலி ஒலி எழுப்பினால் அது சிரிப்பது போல் இருக்கும்.
கழுதைப்புலியின் கால்கள் நாயைப் போலவும் உடலின் மற்ற பகுதிகள் பூனையைப் போலவும் இருக்கும். பேரிய தலையும் விறைப்பான நிமிர்ந்துள்ள காதுகளும் கொண்ட கழுதைப்புலியின் பின்னங்கால்கள் குட்டையாகவும் பருத்தும் இருக்கும். 150 செ.மீ நீளமுள்ள இதன் உயரம் சுமார் 90 செ.மீ இருக்கும்.
கழுதைப்புலி தனது இரையை வேட்டையாடி உண்பதில்லை. மற்றைய மிருகங்கள் விட்டுச் சென்ற இரையை அது தின்னும். ஆகவே விலங்குலகின் சுத்திகரிப்புத் தொழிலாளி என்று இதைக் கூறுவதுண்டு. 



No comments:

Post a Comment