சுனாமி அலைகள் ஆழமான கடலின் அடிப்பகுதிகளில் ஏற்படும் புவியதிர்வுகளால் 
உருவாக்கப்படுகின்றன. இது ஆரம்பத்தில் அலைநீளம் கூடியதாகவும் வீச்சம் 
குறைவானதாகவும் காணப்படும். இதன் காரணமாக சக்தி இழக்கப்படுவது பெருமளவில் 
குறைக்கப்படும். எனினும் இவ்வலைகள் கரையை அண்மிக்கும் போது அவற்றின் அலைநீளம் 
குறைவாகவும் வீச்சம் அதிகமாகவும் காணப்படும். இதனால் இவ்வலைகள் கரையை மிக ஆக்ரோஷமாக 
கரையைத் தாக்குகின்றன.
பொதுவாக சுனாமி அலைகளின் அலைநீளம் ஆழமான கடற்பரப்பில் நூற்றுக்கணக்கான 
கிலோமீற்றர்கள் வரையும் கரையை நெருங்கும் போது 10 மீற்றர்கள் வரையும் 
காணப்படும்.
சுனாமி ஏற்படக் காரணமான நிகழ்வுகள்
1. நிலநடுக்கம்
2. எரிமலைகள் வெடித்தல்
3. மண்சரிவு
4. எரிகற்கள் வீழ்தல்
5. கடலுக்கு அடியில் மேற்கொள்ளப்படும் அணுவாயுத பரீட்சித்தல்கள்
 



No comments:
Post a Comment