இரு பகுதிகளைக் கொண்டது.
1. கரு (Nucleus)
   அணுவின் மத்தியில் காணப்படும் நேரேற்றம் கொண்ட திணிவு அடர்ந்த 
   பகுதியாகும். இங்கு புரோத்தன்களும் நியூத்திரன்களும் பிரதானமாகக் 
   காணப்படுகிறது. இவை “நியூக்கிளியோன்கள் அல்லது கருவன்கள்” 
   எனப்படும்.
2. வெற்றிடம் (Space)
   கருவின் வெளிப்புறம் காணப்படும் பிரதேசமாகும். இங்கு கருவில் உள்ள 
   நேரேற்றத்திற்குச் சமனான இலத்திரன்கள் வௌ;வேறு சக்தி மட்டங்களில் 
   அசைகிறது.
3. அணுவெண்(Atomic Number) (Z)
    மூலக அணுவொன்றின் கருவில் காணப்படும் புரோத்தன்களின் 
    எண்ணிக்கை அதன் அணுவெண் or புரோத்தன் எண் or  கருவின் ஏற்றம் 
    எனப்படும்.
நடுநிலையான அணுவொன்றின் கருவில் காணப்படும் புரோத்தன்களின் எண்ணிக்கையும் 
வெற்றிடத்தில் காணப்படும் இலத்திரன்களின் எண்ணிக்கை யும் சமனாகும்.
இங்கு Z = P ஆகும்          P -   புரோத்தன்களின் 
எண்ணிக்கை.
குறிப்பு:- 
மூலகங்களின் அணுவெண்ணை X - கதிர்நிறமாலைத் தரவுகளைப் பயன் படுத்தி “மோஸ்லி” 
(Mosely) எனும் விஞ்ஞானி துணிந்தார்.
4. திணிவெண் (Atomic Mass) (A)
    அணுவின் கருவில் காணப்படும் புரோத்தன்களினதும், நியூத்திரன்களினதும்     
கூட்டுத்தொகை அதன் திணிவெண்ணாகும்.
5. சமதானிகள் (Isotops)
   ஒரே அணுவெண்ணையும் வேறுபட்ட திணிவெண்ணையும் கொண்ட ஒரே    
   மூலகத்தின் வௌ;வேறு அணுவடிவங்கள் சமதானிகள் எனப்படும்.
சமதானிகளைக் கண்டுபிடித்தவர் “ஸ்ரொடி” (Stody) எனும் விஞ்ஞானி 
ஆவார்.
நியூத்திரன்களின் எண்ணிக்கை வேறுபாட்டினாலேயே சமதானிகள் தோன்று கிறது
எனவே சமதானிகள்
1. ஒரே எண்ணிக்கையான புரோத்தன்களையும், ஒரே எண்ணிக்கையான 
    இலத்திரன்களையும் கொண்டது.
2. வேறுபட்ட எண்ணிக்கையான நியூத்திரன்களைக் கொண்டது.
3. ஒரே இரசாயன இயல்புகளைக் காட்டும்.
4. வேறுபட்ட பௌதீக இயல்புகளைக் காட்டும். 
(உ+ம்)  திணிவு, அடர்த்தி, பரவல்விகிதம், கொதிநிலை
குறிப்பு:- 
எனவே பௌதீக இயல்புகளைப் பயன்படுத்தியே சமதானிகள் ஒன்றிலிருந்து 
வேறுபிரிக்கப்படுகின்றது.
சமதானிகளைப் பிரித்தெடுக்கும் முறைகள்
1. பரவல் முறை
2. வெப்பப்பரவல் முறை
3. ஆவியாதல் முறை
4. திணிவு நிறமாலைப் பதிகருவி முறை
சமதானிகளைப் பகுப்புச்செய்து அவை தொடர்பான தகவல்களைப்பெற்று தொடர்பணுத்திணிவைக் 
கணிப்பதற்காக “அஸ்ரன்” (Astron) எனும் விஞ்ஞானியினால் திணிவுப்புகுப்புமானி 
ழச திணிவு நிறமாலைப் பதிகருவி அறிமுகப்படுத்தப்பட்டது. (எனினும் 
புதியபாடத்திட்டத்தின்படி இக்கருவியின் அமைப்பும் அதனது தொழிற்பாடும் கற்றல் 
நோக்கில் அவசியமில்லை.)
திணிவு நிறமாலைப்பதிகருவியில் இருந்து பெறப்படும் தகவல்கள்
1. மூலகத்தில் உள்ள சமதானிகளின் எண்ணிக்கை.
2. ஒவ்வொரு சமதானியினதும் இயற்கை சார்பு விகிதம்/ சதவிகிதம்.
3. சமதானியினது திணிவெண்.
4. மேற்கூறிய மூன்று தகவல்களிலும் இருந்து குறித்த மூலகத்தின் 
   தொடர்பணுத்திணிவை பௌதீக முறையில் கணிக்கலாம்.
 
No comments:
Post a Comment