இந்தோனேசியாவின் பாலித் தீவுகளில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப்
போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 23 வயதான மேகான் யங் (Megan
Young) அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் 126 போட்டியாளர்களில் இருந்து
தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டவர்.
இப்போட்டிகள் தலைநகர் யகர்த்தாவில் ஒழுங்கு செய்யப்பட்டு பின்னர் பாதுகாப்புக்
காரணங்களுக்காக பாலித்தீவுகளுக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் இரண்டாவது இடத்தை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Marine
Lorphelin அவர்களும் மூன்றாவது இடத்தை காணா நாட்டைச் சேர்ந்த Carranzar Naa
Okailey Shooter அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.
இப்போட்டியில் இலங்கை சார்பாக இரேசா அசங்கி டி சில்வா என்பரும்
போட்டியிட்டமை குறிப்பிடத்தது.


No comments:
Post a Comment